திருச்சியில் ஸ்பா, அழகு நிலையம், முடிதிருத்தகம் நடத்துபவர்கள் 30 நாள்களுக்குள் அனுமதி பெறவேண்டும் - மாநகராட்சி ஆணையர் உத்தரவு

மாதிரிப் படம்

திருச்சி மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள முடித் திருத்தகம், அழகு நிலையங்கள், மசாஜ் மையங்கள் 1 மாதத்திற்குள் உரிமம் பெற வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

 • Share this:
  திருச்சி மாநகர காவல் துறையின் தனிப்படை போலீசாரின் சோதனையில் கடந்த ஒரு மாதத்தில் ஸ்பா என்கிற பெயரில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 30க்கும் மேற்பட்டோர் மீட்க்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில், திருச்சியில் முடித்திருத்தகம், அழகு நிலையங்கள், மசாஜ் மையங்கள் நடத்துவோர் ஒரு மாதத்துக்குள் உரிமம் பெறவேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில், ‘திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் முடித்திருத்தகம், அழகுநிலையம், ஸ்பா, மசாஜ் நிலையம் நடத்துவோர் திருச்சி மாநகராட்சியால் குறிப்பிட்டுள்ள விண்ணப்பத்தை திருச்சி மாநகராட்சி ஆணையாளரிடமிருந்து பெற்று, இவ்வறிவிப்பு வெளியிடப்பட்ட நாளிலிருந்து முப்பது நாட்களுக்குள் 2018-ம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சி சட்டங்கள் சட்டத்தினால் திருத்தம் செய்யப்பட்ட அட்டவணை 4-ல் குறித்துரைக்கப்பட்டுள்ள நோக்கங்களுக்காக 1981-ம் ஆண்டு கோயம்புத்தூர் மாநகராட்சி சட்டம் உடன் இணைந்த பிரிவு 8-ன் படி, 1994-ம் ஆண்டு திருச்சி மாநகராட்சி சட்டம் மேற்சொன்ன தமிழ்நாடு சட்டம் 25/1981, பிரிவு 360-ன் படி தவறாமல் உரிமம் பெற்றுக் கொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறது.

  தவறும் பட்சத்தில், தங்களது தொழில் உரிமம் இன்றி செயல்படுவதாக கருதி நிலையம் நடத்துவோரும், நிலைய உரிமையாளரும் பொறுப்பானவராக கருதி நிலையத்தை மூடி முத்திரையிடுதல் உள்ளிட்ட அனைத்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளையும் மேற்சொன்ன சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: