கொரோனாவால் உயிரிழந்த காவலர்கள் உருவபடத்திற்கு மரியாதை; கண்ணீர் விட்டு அழுத காவலர்கள், குடும்பத்தினர்!

கொரோனாவால் உயிரிழந்த காவலர்கள் உருவபடத்திற்கு மரியாதை; கண்ணீர் விட்டு அழுத காவலர்கள், குடும்பத்தினர்!

கெரோனாவால் உயிரிழந்த காவலர்களின் உருவபடத்திற்கு அவர்களது உறவினர்கள் கண்ணீர் மல்க மரியாதை செலுத்திய நிகழ்வு அனைவரையும் கண்கலங்க செய்தது. 

  • Share this:
சென்னையில் கொரோனா நோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக காவல்துறையினர் ஆற்றிய பங்கு அளப்பரியது. ஆனால் தொடர்ந்து காவலர்கள் கொரோனா ஊரடங்கு பாதுகாப்பு பணியிலும், ரோந்து பணியிலும் ஈடுபட்டு வந்ததால் காவல்துறையினர் சுமார் 5000க்கும் மேற்பட்டோர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டனர். அதில் முதல் அலையில் 10 காவலர்கள், இரண்டாம் அலையில் 28 காவலர்கள் என இதுவரை 38 காவலர்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

இதில், கடந்த 3 மாதங்களில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 1 உதவி ஆணையர், 1 காவல் ஆய்வாளர், 5 சிறப்பு உதவி ஆய்வாளர், 5 உதவி ஆய்வாளர், 4 தலைமை காவலர், 3 காவலர்கள் என மொத்தம் 19 காவலர்களின் உருவ படத்திற்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்றது.

Also read: கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை... சென்னையில் புதிய கட்டுப்பாடுகள்

காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நிகழ்வில் கலந்து கொண்டு 19 காவலர்களின் உருவபடத்திற்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து கூடுதல் ஆணையர்கள் தேன்மொழி, செந்தில் குமார், கண்ணன் உட்பட போலீஸ் உயரதிகாரிகள் தங்களது மரியாதையை செலுத்தினர்.

இதனையடுத்து உயிரிழந்த காவலர்களின் உருவபடத்திற்கு அவர்களது உறவினர்கள் கண்ணீர் மல்க மரியாதை செலுத்திய நிகழ்வு அனைவரையும் கண்கலங்க செய்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதனை தொடர்ந்து உயிரிழந்த 19 காவலர்களுக்காக 2 நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உட்பட காவல்துறை ஆண், பெண் உயரதிகாரிகள், காவலர்கள் கண்ணீர் விட்டு அழுதனர். இந்த காட்சி அந்த இடத்தையே சோகமாக்கியது.

குறிப்பாக கொரோனா பணியில் உயிரிழக்கும் காவலர்களுக்கு அரசு நிவாரணத்தொகை வழங்கும் என அறிவித்துந்த நிலையில், கொரோனா நோயால் பலியான 38 காவலர்களில் இதுவரை 5 காவலர்களின் குடும்பத்தினருக்கு மட்டுமே அரசு நிவாரண தொகை வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Esakki Raja
First published: