Home /News /tamil-nadu /

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த 13 பேரின் உடல்கள் வெலிங்டன் இராணுவ மைதானத்தில் இன்று அஞ்சலிக்காக வைக்கப்படுகின்றன

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த 13 பேரின் உடல்கள் வெலிங்டன் இராணுவ மைதானத்தில் இன்று அஞ்சலிக்காக வைக்கப்படுகின்றன

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்கள் பிரேதபரிசோதனைக்கு பின்னர் வெலிங்டன் இராணுவ மைதானத்தில் இன்று காலை 10 மணிக்கு அஞ்சலிக்காக வைக்கப்படுகின்றது.

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்கள் பிரேதபரிசோதனைக்கு பின்னர் வெலிங்டன் இராணுவ மைதானத்தில் இன்று காலை 10 மணிக்கு அஞ்சலிக்காக வைக்கப்படுகின்றது.

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்கள் பிரேதபரிசோதனைக்கு பின்னர் வெலிங்டன் இராணுவ மைதானத்தில் இன்று காலை 10 மணிக்கு அஞ்சலிக்காக வைக்கப்படுகின்றது.

    நீலகிரி மாவட்டம் குன்னூர் நஞ்சப்ப சத்திரம் பகுதியில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த 13 பேரின் உடல்கள் பிரேதபரிசோதனைக்கு பின்னர் வெலிங்டன் இராணுவ மைதானத்தில் இன்று காலை அஞ்சலிக்காக வைக்கப்படுகின்றது. காலை 10 மணி அளவில் இறந்தவர்களின் உடல்களுக்கு இராணுவ அதிகாரிகள், அரசு அதிகாரிகள் அஞ்சலி செலுத்துகின்றனர்.

    நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரியின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 14 பேர் ஹெலிகாப்டரில் சென்றனர். கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்ட Mi-17V5 ரக ஹெலிகாப்டர், வெலிங்டனில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள, குன்னூர் காட்டேரி மலைப்பகுதியில் பறந்தபோது திடீரென கீழே விழுந்து தீப்பிடித்து எரிந்தது.

    இந்த விபத்தில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் மற்றும் அவரின் மனைவி மதுலிகா ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், பிபின் ராவத் உள்ளிட்டோரின் உடல்கள் ராணுவ விமானம் மூலம் இன்று டெல்லிக்கு கொண்டு செல்லப்படுகின்றன. பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் உடல்கள் நாளை அவர்களது இல்லத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றன. நாளை காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை பிபின் ராவத்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக அவரது வீட்டில் வைக்கப்பட உள்ளது. பின்னர் டெல்லி கண்டோன்மெண்டில் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பிபின் ராவத் மற்றும் ராணுவ அதிகாரிகள் சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதை அடுத்து, விமானம் மூலம் கோவை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பின்னர் கார் மூலம் குன்னூருக்கு விரைந்தார். வெலிங்டனில் உள்ள ராணுவ மையத்திற்கு சென்ற அவர், ஹெலிகாப்டர் விபத்து குறித்தும், விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்தும் ராணுவ அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    தொடர்ந்து நீலகிரி ஆட்சியர் மற்றும் காவல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில் வைக்கப்பட்டுள்ள முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் படத்திற்கு அஞ்சலி செலுத்தினார். அங்கு வைக்கப்பட்ட புத்தகத்தில் முதல்வர் இரங்கல் குறிப்பை பதிவு செய்தார்.

    அதில், தாய்த்திருநாட்டின் வீரத்திருமகன் விபத்தில் உயிரிழந்ததற்கு நாடு அடைகிற துன்பத்தில் தானும் இணைந்து தனது வீர வணக்கத்தை செலுத்துவதாக அவர் பதிவிட்டுள்ளார். விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வரும் கேப்டன் வருண்சிங்கை சந்திக்க உள்ளதாகவும், விபத்து நடந்த இடத்தை இன்று முதல்வர் நேரில் சென்று பார்வையிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    இதற்கிடையில், ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்தின் ஆன்மா சாந்தி அடைய காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் மோட்சதீபம் ஏற்றப்பட்டது. காமாட்சி அம்மன் கோவிலின் கிழக்கு கோபுரத்தில் காஞ்சி சங்கரமடத்தின் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சார்பில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது. முன்னதாக பிபின் ராவத் நாட்டிற்கு செய்த சேவைகள் எதிர்கால தலைமுறைகளால் என்றென்றும் நினைவு கொள்ளத்தக்கது என காஞ்சி சங்கர மடத்தின் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    Must Read : உதகையில் படித்தவர்.. ராணுவ குடும்பத்தை சேர்ந்த ஜெனரல் பிபின் ராவத்தின் பின்னணி

    இந்நிலையில், ஹெலிகாப்டர் விபத்து குறித்து கிராம நிர்வாக அலுவலர் புகாரின் பேரில் குன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Army Chief General Bipin Rawat, Helicopter, Helicopter Crash

    அடுத்த செய்தி