மறைந்த மதுசூதனன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி

மறைந்த மதுசூதனன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி

மறைந்த அதிமுக அவைத்தலைவர் மதுசூதன் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

 • Share this:
  அதிமுகவில்  அவைத்தலைவராக இருந்த மதுசூதனன். கடந்த சில ஆண்டுகளாகவே இவரது உடல்நிலையில் சில பிரச்சினைகள் இருந்தன. 80 வயதான மதுசூதனன், இதற்காகக் கடந்த காலங்களில் தொடர்ந்து சிகிச்சை பெற்றே வந்தார். இந்தச் சூழலில் கடந்த ஜூலை மாதம் மதுசூதனனுக்கு, திடீரென மூச்சுத்திணறல் பிரச்சினையை ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காகச் சென்னையிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரது உடல்நிலை திடீரென மோசமானது, மேலும் வென்டிலேட்டர் உதவியுடனும் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது.

  இந்நிலையில் மதுசூதனன் உடல்நிலை நேற்று மிகவும் மோசமான நிலையில் இருந்தது. இதனால் அதிமுக முக்கிய நிர்வாகிகள் மருத்துவமனைக்கு நேரில் சென்றனர். இதையடுத்து நேற்று மாலை சிகிச்சை பலனின்றி மதுசூதனன் காலமானார் என்று அதிகரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மதுசூதனன் மறைவிற்கு அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து இருந்தனர்.

  மதுசூதனின் உடல் மருத்துவமனையிலிருந்து தண்டையார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு  இன்று கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது, மதுசூதனன் உடலுக்கு ஓபிஎஸ், இபிஎஸ் நேரில் அஞ்சலி செலுத்திய நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும் அவரது குடும்பத்தினருக்கு தனது இரங்கலை தெரிவித்து கொண்டார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: