மறைந்த கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

மறைந்த கருணாநதி நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

மறைந்நத திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

 • Share this:
  தமிழகத்தின் முதலமைச்சராக 5 முறை பதவிவகித்துள்ள மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் 3-வது ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்குப் பின் திமுக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், கருணாநிதி நினைவு தின நிகழ்ச்சியை மிகப்பெரிய அளவில் நடத்த திமுக நிர்வாகிகள் திட்டமிட்டிருந்தனர்.

  ஆனால், கொரோனா 3-வது அலைபரவல் எச்சரிக்கை காரணமாகவும், கொரோனா தொற்று மெல்ல மெல்ல அதிகரித்து வருவதாலும் பெரிய அளவிலான நிகழ்ச்சிகளைத் தவிர்த்து அவரவர் வீடுகள் முன்பு கருணாநிதி படம் வைத்து அஞ்சலி செலுத்துமாறு நிர்வாகிகள், தொண்டர்களுக்கு கட்சித் தலைவரும், முதல்-அமைச்சருமான ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.

  Also Read : ஓயாத உழைப்பாளி... ஒப்பற்ற படைப்பாளி...! கலைஞர் கருணாநிதியின் நினைவு நாள் இன்று

  இந்நிலையில், கருணாநிதி நினைவு தினமான இன்று காலை சென்னை மெரினா கடற்கரை அண்ணா நினைவிட வளாகத்தில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், கே.என்.நேரு உள்ளிட்டஅமைச்சர்கள், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, மகளிரணிச் செயலாளர் கனிமொழி உள்ளிட்ட நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.

  Also Read : காண கிடைக்காத கலைஞர் கருணாநிதியின் அரிய புகைப்படங்கள்!

  இதையடுத்து துர்கா ஸ்டாலினும் கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தமிழகத்தில் உள்ள கோவில் இடங்களில் ஒரு லட்சம் கலைஞர் தல மரக்கன்றுகள் நடும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்

  கருணாநிதியின் கோபாலபுரம் இல்லம், ஆழ்வார்பேட்டை இல்லம் ஆகிய இடங்களிலும் கருணாநிதி படத்துக்கு முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: