முகப்பு /செய்தி /தமிழ்நாடு / அமைச்சர் சீனிவாசன் மீது தேசிய பழங்குடியினர் ஆணையத்தில் புகார் அளிக்க முடிவு...! மலைவாழ் மக்கள் சங்கம்

அமைச்சர் சீனிவாசன் மீது தேசிய பழங்குடியினர் ஆணையத்தில் புகார் அளிக்க முடிவு...! மலைவாழ் மக்கள் சங்கம்

அமைச்சர் திண்டுகள் சீனிவாசன்

அமைச்சர் திண்டுகள் சீனிவாசன்

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

அமைச்சர் திண்டுகள் சீனிவாசன் மீது தேசிய பழங்குடியினர் ஆணையத்தில் புகார் அளிக்க மலைவாழ் மக்கள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.

வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை பதவி நீக்கக் கோரியும், எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கப்பதிவு செய்ய வலியுறுத்தியும் , சென்னை பட்டினப்பாக்கத்தில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் துணை தலைவர் சண்முகம், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மலைவாழ் மாணவனை தன் காலணியை கழட்ட சொன்ன விவகாரம் தொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பகிரங்கமாக நடைபெற்ற குற்ற செயலுக்கு , அவர்கள் நிற்பந்தித்ததால் அந்த சிறுவன் தான் காவல் துறையில் அளித்த புகாரை திரும்ப பெற்றுள்ளான் எனவே,

தமிழக முதல்வர், வனத்துறை அமைச்சரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றார்.

மேலும், முதல்வர் நடவடிக்கை எடுக்காவிட்டால், பழங்குடியினர் தேசிய ஆணையத்தில் புகார் தெரிவிப்போம் என்றும், தமிழகம் முழுவதும் தங்கள் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட 30-க்கும் மேற்ப்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Also see...

First published:

Tags: Dindigal Sreenivasan