வாழ்நாளில் ரயிலை கூட பார்க்காத குழந்தைகளுக்கு கிடைத்த வாய்ப்பை பார்த்தீங்களா?

காடுகளையும், மலைகளையும் மட்டுமே பார்த்து பழகிய மலை வாழ் குழந்தைகளுக்கு ரயில் பயணமும், சென்னை வருகையும் புது அனுபவத்தை தந்துள்ளன.

Web Desk | news18-tamil
Updated: August 18, 2019, 7:23 PM IST
வாழ்நாளில் ரயிலை கூட பார்க்காத குழந்தைகளுக்கு கிடைத்த வாய்ப்பை பார்த்தீங்களா?
மலைவாழ் குழந்தைகள்
Web Desk | news18-tamil
Updated: August 18, 2019, 7:23 PM IST
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த குழந்தைகள் கடலை நேரில் காண வாழ்வில் முதல் முறை ரயிலில் பயணித்து சென்னை வந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த அக்னிபாவி,கடம்பூர், விளாங்கோம்பு ஆகிய மலைக்கிராமங்களை சேர்ந்த குழந்தைகள் மலையில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பயின்று வருகின்றனர்.

மலையோடு அமைந்த இந்த குழந்தைகளின் வாழ்வில் நகரின் வசதிகளும் வாய்ப்புகளும்  கிடைக்கவில்லை.


இதனால், இந்த குழந்தைகள் பேருந்துகளில் கூட பயணித்தது இல்லை.

இந்நிலையில், இந்த குழந்தைகளுக்கு ரயில் பயண அனுபவத்தை ஏற்படுத்தி தரும் பொருட்டு, "சுடர்" என்கிற அமைப்பு 50 குழந்தைகளை சென்னைக்கு முதன் முறையாக ரயிலில் அழைத்து வந்துள்ளது.

காடுகளையும், மலைகளையும் மட்டுமே பார்த்து பழகிய மலை வாழ் குழந்தைகளுக்கு ரயில் பயணமும், சென்னை வருகையும் புது அனுபவத்தை தந்துள்ளன.

Loading...
Also Watch: 48 நாட்கள் வீட்டுச் சிறையில் இருந்து சுதந்திரம் பெற்ற காஞ்சி மக்கள்... 

First published: August 18, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...