ட்விட்டரில் ட்ரெண்டாகும் #29YearsTooMuchGovernor !

எழுவர் விடுதலை குறித்து ட்விட்டரில் # 29YearsTooMuchGovernor என்ற ஹாஸ்டாக் ட்ரெண்டாகி வருகின்றது.

Web Desk | news18
Updated: June 11, 2019, 7:27 PM IST
ட்விட்டரில் ட்ரெண்டாகும் #29YearsTooMuchGovernor !
பேரறிவாளன்.
Web Desk | news18
Updated: June 11, 2019, 7:27 PM IST
ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் சிறையில் அடைக்கப்பட்டு இன்றுடன் 28 ஆண்டுகள் நிறைவடைகின்றது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேர் கடந்த 28 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

இந்நிலையில், விசாரணை அதிகாரிகளின் விளக்கத்தின் அடிப்படையில் தன்னை விடுவிக்க வேண்டுமென்று பேரறிவாளன் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு விசாரித்தது.

பேரறிவாளனை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசே முடிவுசெய்து கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

விடுதலை தொடர்பாக ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரை செய்யலாம் என்றும், பரிந்துரையின் மீது முடிவெடுக்கும் முழு அதிகாரம் ஆளுநருக்கு உள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதனை அடுத்து, 7 பேரை விடுதலை செய்யும் பரிந்துரையை ஆளுநருக்கு அனுப்புவது குறித்து ஆலோசனை நடத்திய தமிழக அமைச்சரவை குற்றஞ்சாட்டப்பட்ட 7 பேரையும் விடுவிக்க முடிவெடுத்து அதை தமிழக ஆளுநருக்கு பரிந்துரை செய்து தீர்மானமாக நிறைவேற்றியது.

இந்நிலையில் ராஜிவ் காந்தியின் கொலை வழக்கில் தொடர்புடைய ஏழு பேரின் விடுதலைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் குண்டுவெடிப்பில் இறந்தவர்களின் உறவினர்களின் சார்பாக 9 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அந்த மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அமெரிக்கை நாராயணன், சாதிக் அலி உள்ளிட்ட 9 பேர் தொடர்ந்த மனுவில் இந்த 7 பேரின் விடுதலை ஏற்கத்தக்கது அல்ல என்றும், குண்டு வெடிப்பில் தொடர்புடைய அவர்களை எந்த காரணத்தைக் கொண்டும் விடுதலை செய்யக் கூடாது என்றும் அவர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்டது.

இதனை கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஏற்கெனவே இந்த 7 பேர் விடுதலை குறித்து முடிவுகள் எடுக்கப்பட்டு இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் தற்போது இந்த வழக்கு குறித்து எந்த முடிவும் எடுக்க முடியாது என்றும், இவர்களின் விடுதலை குறித்து ஆளுநரே முடிவெடிப்பார் என்றும் கூறிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அந்த 9 பேரின் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

மேலும் 7 பேரில் விடுதலைக் குறித்து தமிழக அரசு சார்பில் வாதிட்ட போது, தமிழக அரசு சார்பில் எழுவர் விடுதலைக் குறித்து ஆளுநருக்கு பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது. அதற்கு ஆளுநர் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருக்கும் போது எந்த முடிவையும் எடுக்க முடியாது என்று கூறியதையும் நீதிமன்றத்தில் தங்களது வாதத்தின் போது தமிழக அரசு முன்வைத்தது.

அதற்கு மறுப்பு தெரிவித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், எழுவர் விடுதலை குறித்து ஆளுநரே முடிவெடுக்க வேண்டும் என்றும் அதற்கு யாரும் தற்போது தடையாக இல்லை. நீதிமன்றத்தை காரணம் காட்டி ஆளுநர் தயக்கம் காட்ட வேண்டிய தேவை இல்லை என்றும் ஒரு கருத்தை முன்வைத்தனர்.

இந்நிலையில் இன்றுடன் எழுவர் கைது செய்யப்பட்டு 28 ஆண்டுகள் ஆகின்ற நிலையில் ட்விட்டரில்  #29YearsTooMuchGovernor ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகின்றது.

First published: June 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...