• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • #HBD_ LIC - எல்.ஐ.சி தொடங்கி 65வது வருட தொடக்கநாளில் ட்ரெண்டான ஹேஷ்டேக்

#HBD_ LIC - எல்.ஐ.சி தொடங்கி 65வது வருட தொடக்கநாளில் ட்ரெண்டான ஹேஷ்டேக்

கோப்புப்படம்.

கோப்புப்படம்.

எல்.ஐ.சி நிறுவனத்தின் பங்குகளை விற்பதற்கு அரசு முடிவு செய்துள்ள நிலையில் அதன் 65வது தொடக்க நாளில் எல்.ஐ.சி நிறுவனத்தை பாதுகாக்க வேண்டும் என்று கனிமொழி, சீதாராம் யெச்சூரி, கே.எஸ்.அழகிரி உட்பட பல்லாயிரக்கணக்கானோர் ட்விட்டரில் தங்கள் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

  • Share this:
HBD_ LIC என்ற ஹேஷ் டேக் –ல் முப்பதாயிரத்துக்கும் மேற்பட்டோர் டீவீட் செய்து, தமிழ்நாட்டில் மூன்றாவது இடத்தில் ட்ரெண்டிங்-ல் இருந்தது. இந்தியா முழுவதும் ஒன்றரை லட்சம் ஊழியர்கள் மற்றும் 11 லட்சம் முகவர்கள் கொண்ட எல்.ஐ.சி நிறுவனம். இன்சூரன்ஸ் துறையில் தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ளது. அதன் 10% பங்குகளை விற்பதாக அரசு முடிவு செய்திருப்பதை அதன் ஊழியர்களும் பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்த்து வருகின்றனர்.

இதுகுறித்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ட்விட்டர் பதிவில், “இந்தியாவின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றிய நவரத்தினங்களில் ஒன்று எல்.ஐ.சி. 31.11 லட்சம் கோடி சொத்துக்களோடு பல்வேறு சவால்களைக் கடந்து வெற்றிநடை போட்டு வருகிறது. மத்திய அரசோ இந்த அரும் செல்வத்தை அழிக்க நினைக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.

Also read: சுங்கச்சாவடி கட்டணமும் உயர்வு: மக்கள் எவ்வளவு அடிகளைத் தாங்குவார்கள்- மு.க.ஸ்டாலின் கண்டனம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தனது ட்விட்டர் பக்கத்தில், “சுதந்திர இந்தியாவின் பொருளாதார சுயசார்பை வளர்க்க ஐந்தாண்டு திட்டங்களுக்கு நிதி கிடைக்க பெரும் பங்கு ஆற்றியது எல்.ஐ.சி. இதை தனியாருக்கு கொடுப்பதன் மூலம் இந்தியாவின் சுயசார்பை மோடி குறைக்கிறார்” என்று பதிவிட்டுள்ளார். 99 வயது சுதந்திரப் போராட்ட வீரர் என்.சங்கரய்யா வெளியிட்டுள்ள வீடியோவில் பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி “நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியுள்ளது. எல்.ஐ.சியின் பங்குகளை விற்பதைக் கைவிட்டு அதை விரிவாக்க வேண்டும்” என்று பேசியுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள வீடியோவில், “இந்தியாவின் உயிர்நாடியின் நிறுவனம். எல்லா மக்களையும் சந்தித்து காப்பீட்டை அறிமுகப்படுத்தியது எல்.ஐ.சி. அரசின் லாபம் என்பது மக்களுக்கான லாபம். கிராமப்புற குடிநீர் திட்டங்கள், போக்குவரத்து, ரயில்வே துறைகளுக்கு எல்.ஐ.சி நிதி வழங்கியுள்ளது. ஆனால் தனியாரின் லாபம் மக்களின் லாபம் அல்ல” என்றார்.“எல்.ஐ.சி லாபகரமாக இயங்கிக் கொண்டு வரும் நிறுவனம். மார்க்கெட் ஷேரில் 75% கொண்டு, இந்தியாவில் உள்ள 25 இன்சூரன்ஸ் கம்பெனிகளுள் முன்னணி நிறுவனமாக உள்ளது. எல்.ஐ.சி சட்டத்தில்  திருத்தம் கொண்டு வராமல் பங்குகளை விற்க முடியாது. ஆனால் பட்ஜெட்-ல் அறிவித்து விட்டு, பங்குகளை விற்பதற்கான ஆரம்ப கட்ட நிர்வாக நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு துணைத் தலைவர் க.சுவாமிநாதன் தெரிவிக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rizwan
First published: