அனுமதி பெற்று தான் உள்ளே சென்றனர்- ட்ரெக்கிங் நிறுவன உரிமையாளர் விளக்கம்

news18
Updated: March 13, 2018, 3:54 PM IST
அனுமதி பெற்று தான் உள்ளே சென்றனர்- ட்ரெக்கிங் நிறுவன உரிமையாளர் விளக்கம்
சென்னை ட்ரெக்கிங் கிளப் நிறுவனர் பீட்டர்
news18
Updated: March 13, 2018, 3:54 PM IST
குரங்கணி மலைப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து  சென்னை ட்ரெக்கிங் கிளப் உரிமையாளர் பீட்டர் விளக்கம் அளித்துள்ளார். அதில் சோதனை சாவடியில் உரிய  அனுமதி பெற்று தான் உள்ளே சென்றார்கள், தீவிபத்து எதிர்பாராமல் ஏற்பட்ட ஒன்று  என அவர் கூறியுள்ளார்.

சென்னை ட்ரெக்கிங் கிளப் பத்து வருடங்களுக்கும் மேலாக இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் மூலம்  பல பகுதிகளுக்கும் ட்ரெக்கிங் கூட்டி செல்வது வழக்கமாக இருந்திருக்கிறது. இந்நிலையில் குரங்கணி மலையேறும் பயிற்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அப்போது எதிர்பாராமல் ஏற்பட்ட காட்டு  தீ பலர் உயிரிழப்புக்கு காரணமாக அமைந்தது.

மலையேறும் பயிற்சிக்கு சென்றவர்கள் வனத்துறையினரிடன் உரிய அனுமதி பெறவில்லை என பலரும் குற்றம் சாட்டி வந்தனர். அது குறித்து தற்போது பீட்டர் விளக்கமளித்துள்ளார்.

அவர் கூறியதாவது:  அடிவாரப் பகுதியான குரங்கணியிலிருந்து கொழுக்கு மலைக்கு செல்லும் வழக்கமான பாதையில் வழிகாட்டிகளுடன் தான் அவர்கள் சென்றுள்ளனர். ஆனால்  ஞாயிற்று கிழமை காலையில் வேளாண் பகுதிகளுக்காக அங்குள்ள கிராம மக்கள் வைத்த தீ பரவியுள்ளதாகவும் போடி பள்ளத்தாக்கில் வழக்கத்தை விட காற்று அதிகமாக வீசியதால் தீ மளமளவென பரவியிருக்கிறது. 

உயிரிழந்த அருண் மற்றும் விபின் 7 ஆண்டுகளாக நாடு முழுவதும் உள்ள மலைகளில் ஏறி பயிற்சி பெற்றவர்கள்.மேலும் உள்ளே சென்ற அனைவரும் குரங்கணி சோதனை சாவடியில் அனுமதி பெற்று பணம் செலுத்தி தான் உள்ளே சென்றனர். சனிக்கிழமை காலை மலையேற சென்றபோது எந்த அறிகுறியும் இல்லை என சென்னை மலையேறும் கிளப் நிறுவன உரிமையாளர் பீட்டர் விளக்கமளித்துள்ளார்.
First published: March 13, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்