லாஸ்ட் பென்ச் டூ ஃபர்ஸ்ட் பென்ச்.. அன்பில் மகேஷை வாழ்த்திய திமுக எம்.எல்.ஏ

லாஸ்ட் பென்ச்லிருந்து ஃபர்ஸ்ட் பென்சுக்கு செல்லும் அருமை மாப்பிள்ளை அன்பில் மகேஷுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் என டிஆர் பாலுவின் மகனும் மன்னார்குடி எம்எல்ஏவுமான டிஆர்பி ராஜா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 • Share this:
  திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பொய்யாமொழியின் மகனாவார். அத்துடன், திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் பி. தர்மலிங்கத்தின் பேரனும் ஆவார்.

  அன்பில் மகேஷ், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகனும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினுக்கு நெருக்கமானவர்களுள் ஒருவராக இருந்துவருபவர் என்றும் சொல்லப்படுகின்றது. எம்.சி.ஏ. பட்டதாரியான அன்பில் மகேஷ் மிகவும் துடிப்பான இளைஞர் என்ற நற்பெயரைப் பெற்றவர்.

  இவர் திருவெறும்பூர் தொகுதியில் 2016ஆம் ஆண்டு போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்வான அன்பில் மகேஷ், அதன்பின்னர் தற்போது மீண்டும் எம்.எல்.ஏ.வாகியுள்ளார். அவருக்கு தமிழக அமைச்சரவையில் பள்ளி கல்வித்துறை வழங்கப்பட்டள்ளது.

  Also Read : மு.க.ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் நெகிழ்ச்சி சம்பவம் - வைரலாகும் புகைப்படம்

  அன்பில் மகேஷ் பள்ளிக்கல்வி துறை அமைச்சராக நியமிக்கப்பட்டதற்கு பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனிடையே மன்னார்குடி எம்எல்ஏவுமான டிஆர்பி ராஜா வேடிக்கையாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.  டிஆர்பி ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், லாஸ்ட் பென்ச்லிருந்து ஃபர்ஸ்ட் பென்சிக்கு போகும் அருமை மாப்பிள்ளை அன்பில் மகேஷ் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் ! லாஸ்ட் பென்ச்சில் தவித்துக்கொண்டிருக்கும் ஏழை எளிய மாணவர்களின் வாழ்க்கையை முன்னேற்ற வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு அவருடையது என்றுள்ளார்.
  Published by:Vijay R
  First published: