• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • வாடகை வாகனம் ஓட்ட இ-பாஸ் கிடைக்காததால் காரில் சாப்பாடு கடை...!

வாடகை வாகனம் ஓட்ட இ-பாஸ் கிடைக்காததால் காரில் சாப்பாடு கடை...!

கிருஷ்ணமூர்த்தி

கிருஷ்ணமூர்த்தி

  • News18
  • Last Updated :
  • Share this:

திருப்பூரில் வாடகை வாகனம் ஓட்ட இ பாஸ் கிடைக்காததால் இன்னோவா காரில் சாப்பாடு கடை வைத்த டிராவல்ஸ் உரிமையாளர்.


கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனையடுத்து  ஒரு மாவட்டத்தை விட்டு மற்றொரு மாவட்டத்திற்கு செல்ல இ பாஸ் நடைமுறை பின்பற்றப்பட்டது.

இதன் காரணமாக வாடகை வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் கடுமையான வருமான இழப்பை சந்திக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப் பட்டனர். தொடர்ந்து வீட்டு வாடகை குடும்பச் செலவு மற்றும் வாகன கடன் தவணை உள்ளிட்டவைகளை செலுத்த முடியாமல் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

4 மாதங்கள் கடந்து விட்ட நிலையில் தற்பொழுதும் இ பாஸ் கிடைப்பதில் கடுமையான நடைமுறைகள் பின்பற்றப்படுவதால் மாவட்டங்களை விட்டு வெளியே வாடகை வாகனம் இயக்க அனுமதி கிடைப்பதில்லை எனவும் இ பாஸ் முறையை ரத்து செய்ய கோரியும் வாடகை வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Also read... கல்லூரியில் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டாலும் தேர்வுக்கட்டணம் செலுத்த வேண்டும்: உயர்கல்வித்துறை

இந்நிலையில் திருப்பூர் சோளிபாளையம் லோட்டஸ் கார்டன் முதல் வீதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி  என்பவர் வருமானம் இல்லாத சூழலில் குடும்பத்தை நடத்துவதற்காக தனது இன்னோவா காரை சாப்பாடு விற்பனை செய்யும் கடையாக மாற்றியுள்ளார்.



கடந்த 5 தினங்களாக உணவு விற்பனை செய்யும் இவருக்கு இதன் மூலம் அன்றாட செலவுகள் ஈடு செய்யப்படுவதாகவும் எனினும் மற்ற செலவுகளை செய்ய முடியாமல் தவித்து வருவதாகவும் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: