மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவில் திருநங்கை நர்த்தகி நடராஜனுக்கு பொறுப்பு: முதல்வருக்கு குவியும் பாராட்டு!

திருநங்கை நர்த்தகி நடராஜன்

திருநங்கை நர்த்தகி நடராஜன் தமிழக அரசின் கலைமாமணி, இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ பட்டம் பெற்றவர்.

  • Share this:
    மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவில் திருநங்கை நர்த்தகி நடராஜனுக்கு பொறுப்பு வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

    தமிழகத்தில், மாநில திட்டக் குழு, முன்னாள் முதல்வர் கருணாநிதியால், 1971 ஆம் ஆண்டு மே மாதம் 25 ஆம் நாள் ஏற்படுத்தப்பட்டது. மாநில திட்டக் குழு, முதல்வரின் தலைமையின்கீழ் ஒரு ஆலோசனை அமைப்பாக செயல்பட்டு, மாநிலத்தின் பல்வேறு வளர்ச்சிக்கான செயல்பாடுகளில் தனது பரிந்துரைகளை அரசுக்கு அளித்து வருகிறது. மாநில திட்டக் குழு துணைத் தலைவரின் கீழ் வளர்ச்சி சார்ந்த முக்கிய துறைகளின் நிபுணர்களை உறுப்பினர்களாகக் கொண்டு இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. மாநில திட்டக் குழுவானது, கடந்த 23.04.2020-ல் 'மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவாக' மறுசீரமைப்பு செய்யப்பட்டு பல்வேறு முக்கியமான பணிகளை மேற்கொண்டு வருகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவை திருத்தியமைத்து உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, பேராசிரியர் ஜெ.ஜெயரஞ்சன் மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவின் துணைத் தலைவராகவும்; பேராசிரியர். ராம.சீனுவாசன் முழுநேர உறுப்பினராகவும் நியமிகப்பட்டுள்ளனர். அதேபோல், மருத்துவர் ஜோ.அமலோற்பவநாதன், சித்த மருத்துவர் கு.சிவராமன் உள்ளிட்ட மேலும் சிலர் பகுதி நேர உறுப்பினர்களாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    அதில், ஒருவராக திருநங்கை நர்த்தகி நட்ராஜ் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவில் நர்த்தகி நியமனம் செய்யப்பட்டுள்ளது பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. திருநங்கை நர்த்தகி நடராஜன் தமிழக அரசின் கலைமாமணி, இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ பட்டம் பெற்றவர். தமிழகத்தின் பாரம்பரிய நடன கலையை உலகம் முழுவதும் கொண்டு சென்ற பெருமை இவருக்கு உண்டு.

    அனைத்து பிரிவினருக்கும் இந்த குழுவில் இடமளிக்க வேண்டும் என்பதால் மருத்துவர்கள், பொருளாதார வல்லுநர்கள் என்று பல வல்லுநர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த குழுவில் தேர்வு செய்துள்ளார். அந்தவகையில், மூன்றாம் பாலினத்தவர் சார்பாக திருநங்கை நர்த்தகி நடராஜனும் நியமிக்கப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து, தமிழ்நாட்டில் மூன்றாம் பாலினத்தவர் மற்றும் பலர் முதல்வரின் இந்த முடிவுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Esakki Raja
    First published: