முகப்பு /செய்தி /தமிழ்நாடு / போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று போராட்டம்

போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று போராட்டம்

கோப்புப் படம்

கோப்புப் படம்

  • Last Updated :

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் இன்று நடைபெற உள்ளது.

ஊதிய உயர்வு, நிலுவை தொகையை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கோட்டையை நோக்கி முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்படிருந்த நிலையில் இது தொடர்பாக நேற்று சென்னை பல்லவன் இல்லத்தில் போக்குவரத்து துறை செயலாளருடன் போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் சென்னை பல்லவன் இல்லத்தில், தொ.மு.ச, சி.ஐ. டி. யூ., எ.ஐ.டி.யூ.சி, தேசிய முற்போக்கு தொழிற்சங்க பேரவை உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தொ.மு.ச பொதுச்செயலாளர் சண்முகம், திட்டமிட்டபடி போக்குவரத்து கழக தொழிலாளர்கள்  கோட்டையை நோக்கி முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தார்.

First published:

Tags: Salary hike, Transport workers, Transport workers demanding salary