மூன்று நாட்களாக நீடித்த போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்

மூன்று நாட்களாக நீடித்த போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்

கோப்பு படம்

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு இடைக்கால நிவாரணமாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பும் ஏற்கப்பட்டதாக கூறப்படுகிறது.

 • Share this:
  போக்குவரத்து தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்பாக நடத்தப்பட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.

  ஊதிய உயர்வு, காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, போக்குவரத்து தொழிற்சங்கங்கள் இன்று 3வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டன. இந்நிலையில், சென்னையில் தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் லட்சுமி காந்தன் முன்னிலையில், போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்ற பேச்சுவார்த்தை நடைபெற்றது.

  அப்போது 14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடரும் என அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. போக்குவரத்து தொழிலாளர்களுக்கு இடைக்கால நிவாரணமாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பும் ஏற்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, வேலை நிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
  Published by:Vijay R
  First published: