Transport Workers Union | போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த அறிவிப்பு..
14வது ஊதிய ஒப்பந்தத்தை இறுதிப்படுத்துவது உள்ளிட்ட போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு வரும் 17 ஆம் தேதிக்குள் தீர்வு காணப்படாவிட்டால் வேலை நிறுத்தம் செய்யவிருப்பதாக அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

பேருந்துகள் ( கோப்புப் படம்)
- News18 Tamil
- Last Updated: December 2, 2020, 11:57 AM IST
அரசு போக்குவரத்து கழகங்களில் செயல்படும் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதன்படி தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி 14-வது ஊதிய ஒப்பந்தத்தை இறுதிப்படுத்த வேண்டும், சம்பளத்தில் பிடித்தம் செய்யும் தொகையை உரிய கணக்கில் செலுத்த வேண்டும், ஓய்வு பெற்றவுடனேயே ஊழியர்களின் பணப்பலனை வழங்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 3 ஆம் தேதி அனைத்து போக்குவரத்து கழகங்களிலும் வேலை நிறுத்த அறிவிப்பு வழங்குவது என்றும் டிசம்பர் 7 ஆம் தேதி முதல் மண்டல அலுவலகங்களில் வாயிற்கூட்டங்களை நடத்துவது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் தங்களது கோரிக்கைகளுக்கு ஆதரவாக டிசம்பர் 11 மற்றும் 12 தேதிகளில் அரசியல் கட்சிகள், மற்ற தொழிற்சங்கங்களை சந்தித்து ஆதரவு கேட்பது என்றும் டிசம்பர் 14 மற்றும்15 தேதிகளில் மக்கள் சந்திப்பு இயக்கத்தை நடத்துவது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் ஆறுதல் வெற்றிபெறுமா இந்தியா? ஆஸ்திரேலியாவுடன் இன்று கடைசி போட்டி..
17 ஆம் தேதிக்குள் கோரிக்கைகளின் மீது உரிய தீர்வு காணப்படாவிட்டால் டிசம்பர் 17 அன்றோ அல்லது ஆறு வாரங்களுக்குள்ளாகவோ வேலை நிறுத்தம் செய்வது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 3 ஆம் தேதி அனைத்து போக்குவரத்து கழகங்களிலும் வேலை நிறுத்த அறிவிப்பு வழங்குவது என்றும் டிசம்பர் 7 ஆம் தேதி முதல் மண்டல அலுவலகங்களில் வாயிற்கூட்டங்களை நடத்துவது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் தங்களது கோரிக்கைகளுக்கு ஆதரவாக டிசம்பர் 11 மற்றும் 12 தேதிகளில் அரசியல் கட்சிகள், மற்ற தொழிற்சங்கங்களை சந்தித்து ஆதரவு கேட்பது என்றும் டிசம்பர் 14 மற்றும்15 தேதிகளில் மக்கள் சந்திப்பு இயக்கத்தை நடத்துவது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.