Home /News /tamil-nadu /

அதிக கட்டணம் வசூலிக்கும்ஆம்னி பேருந்துகள் - அமைச்சர் விடுத்த முக்கிய எச்சரிக்கை

அதிக கட்டணம் வசூலிக்கும்ஆம்னி பேருந்துகள் - அமைச்சர் விடுத்த முக்கிய எச்சரிக்கை

ஆம்னி பேருந்து கட்டணத்தை அதிகரித்து வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும

ஆம்னி பேருந்து கட்டணத்தை அதிகரித்து வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும

Tamil Nadu | தொட்ர் விடுமுறையையொட்டி ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    மூன்று நாள் தொடர் விடுமுறைக்காக சொந்த ஊர் செல்லும் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இது குறித்து நியூஸ்18 தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், ”ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்தால் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தலைமையிலான குழுவினர் சோதனை நடத்தி பேருந்து உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பர்.

    திருச்சி , மதுரை , நெல்லை , கோவை போன்ற தொலைதூர நகரங்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்துள்ளதால் இன்று மாலை போக்குவரத்துதுறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்ய உள்ளனர்” என்று கூறினார்.



    Also see... கோயம்புத்தூரில் இத்தனை சுற்றுலா இடங்களா? இங்கெல்லாம் போக மறக்காதீங்க...

    மேலும், கூடுதல் கட்டணம் தொடர்பாக பொதுமக்கள் தங்களது எல்லைக்கு உட்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் புகார் தெரிவிக்கலாம் என்றும்  போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தகவல் அளித்துள்ளார்.

    வரும் திங்கள்கிழமை சுதந்திர தினம் என்பதால், சனி, ஞாயிறு என 3 நாட்கள் தொடர் விடுமுறையையொட்டி, ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் தனியார் ஆம்னி பேருந்துகளில், கட்டணம் பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இணையதளத்தில் வெளிப்படையாகவே கூடுதல் கட்டணம் குறித்த விவரங்கள் ஆம்னி பேருந்து நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன.

    சென்னையில் இருந்து கோவைக்கு வழக்கமாக ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், தற்போது அதிகபட்சமாக 4,000 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு3870 ரூபாயும், மதுரைக்கு 3000 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. ஆம்னி பேருந்துகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதால் சமானிய மக்கள் அரசு பேருந்து சேவையை தான் நம்பி உள்ளனர்.
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Chennai, Minister Sivasankar, Omni Bus, Tamil Nadu, Transport

    அடுத்த செய்தி