வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் போலி ஓட்டுநர் உரிமங்கள் வழங்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டில் உண்மை நிரூபணமானால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
திருமங்கலம் பெரியார் நகரைச் சேர்ந்த ஜான் தங்கதுரை என்பவருக்கு கடந்த 1983 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வாகன ஓட்டுநர் உரிமத்தை போக்குவரத்துத் துறை வழங்கியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு உரிமத்தை புதுப்பிக்க சென்ற போது, அவரது உரிமத்தின் எண்ணில் மதுரை வசந்தா நகரைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவரின் உரிமம் இருப்பது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த ஜான் தங்கதுரை அதிகாரிகளிடம் கேட்டபோது, கணினி குளறுபடியால் இப்படி நடந்துவிட்டதாக விளக்கம் அளித்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்
ஆனால் பழைய எண்ணிலேயே ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்க வாய்ப்பில் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அதனால் மீண்டும் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து அதன் மூலம் புதிய ஓட்டுநர் உரிமத்தை பெற்றுள்ளார் ஜான் தங்கதுரை. ஆனால், இது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கேட்டதில் முன்னுக்கு பின் முரணாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழகத்தை இரண்டாக பிரிக்க திட்டமா? மத்திய அரசு பதில்!
தமிழகம் முழுவதும் இது போன்ற முறைகேடுகள் நடந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் போலி ஓட்டுநர் உரிமங்கள் வழங்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டில் உண்மை நிரூபணமானால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
வட்டாரப் போக்குவரத்து துறையில் நடக்கும் முறைகேடுகள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படுமா என்ற கேள்வி சமூக ஆர்வலர்கள் இடையே ஏற்பட்டுள்ளது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.