• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்வா? போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் விளக்கம்

தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்வா? போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் விளக்கம்

போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயராது என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
சென்னையில் 160 நாட்களுக்கு பின்னர் மாநகரப் பேருந்துகள் இன்று இயக்கப்படும் நிலையில் சென்ட்ரல் பனிமணையில் போக்குவரத்து துறை அமைச்சர் எம். ஆர் விஜயபாஸ்கர் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகம் முழுவதும்  6090 பேருந்துகள் இன்று இயக்கப்படுகிறது. பேருந்து இயக்கப்பட்ட முதல் நாளான இன்று பயணிகள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. வரும் காலங்களில் தேவைக்கு ஏற்ப பேருந்து சேவை அதிகரிக்கப்படும் என தெரிவித்தார்.

Also read... ஆசிரியர் தகுதித்தேர்வு முடித்தவர்களுக்கு கால நீட்டிப்பு கிடையாது - அமைச்சர் செங்கோட்டையன்



மேலும் மாநகர பேருந்துகள் மாவட்ட எல்லை அருகில் உள்ள நிறுத்தங்கள் வரை செல்லும் என்றும் அரசு பேருந்துகள் இரவு 9 மணி வரை இயக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மக்கள் தேவைக்கு ஏற்ப படிப்படியாக தளர்வுகள் கொண்டு வரப்படும் என்றும் மாவட்டங்களுக்கிடையே பேருந்து இயக்குவது தொடர்பாக முதலமைச்சர் விரைவில் முடிவெடுப்பார் என்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

மேலும், பேருந்து கட்டணம் உயர்த்தபடுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், தற்போது கட்டண உயர்விற்கு வாய்ப்பில்லை எனவும், புதிய பஸ் பாஸ் நாளை முதல் வழங்கப்படும் என்றும் பழைய பாஸ் செப் 15-ம் தேதி வரை செல்லுபடியாகும் என்றும் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: