2 கி.மீ வரை நடந்து இறுதி கட்டப் பிரச்சாரத்தை முடித்தார் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

2 கி.மீ வரை நடந்து இறுதி கட்டப் பிரச்சாரத்தை முடித்தார் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

போக்குவரத்துத் துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர். இவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் இருந்து தனது சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.

 • Share this:
  கரூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரும், போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாந்தோன்றிமலை பகுதியில் ஆயிரக் கணக்கான தொண்டர்களுடன் இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

  கரூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் 2 வது முறையாக போட்டியிடுபவர் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர். இவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் இருந்து தனது சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் பிரச்சாரத்தின் கடைசி நாளான நேற்று காலை வாங்கபாளையம் பகுதியில் தனது இறுதி கட்டப் பிரச்சாரத்தை துவங்கினார்.

  மேலும் படிக்க... அரவக்குறிச்சி தொகுதியில் 100 புதிய குளங்கள் வெட்டப்பட்டு நீர் நிரப்பப்படும்: பாஜக வேட்பாளர் அண்ணாமலை

  சுங்ககேட் முதல் தாந்தோன்றிமலை அரசு கலை கல்லூரி  வரை சுமார் 2 கிலோமீட்டர் தூரம் ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் நடந்து சென்றவாறு வியாபாரிகள், பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

  இதே போன்று ,கரூர் ஒன்றியப் பகுதிகளில் வாக்குகளை சேகரித்த பிறகு மாலையில் 80 அடி சாலையில் தனது பிரச்சாரத்தை நிறைவு செய்யதார்.

  செய்தியாளர்: தி.கார்த்திகேயன்  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: