Home /News /tamil-nadu /

நரிக்குறவ தம்பதிக்கு பாத பூஜை செய்த போக்குவரத்து ஊழியர்கள் - வைரலாகும் வீடியோ

நரிக்குறவ தம்பதிக்கு பாத பூஜை செய்த போக்குவரத்து ஊழியர்கள் - வைரலாகும் வீடியோ

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அரசுப் பேருந்து நடத்துனர்கள் மற்றும் ஓட்டுனர்கள் சிலர் மீது பொதுமக்களை மரியாதைக் குறைவாக நடத்துகின்றனர் என்பது உள்ளிட்ட புகார்கள் எழுந்துள்ளன.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அரசுப் பேருந்து நடத்துனர்கள் மற்றும் ஓட்டுனர்கள் சிலர் மீது பொதுமக்களை மரியாதைக் குறைவாக நடத்துகின்றனர் என்பது உள்ளிட்ட புகார்கள் எழுந்துள்ளன.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அரசுப் பேருந்து நடத்துனர்கள் மற்றும் ஓட்டுனர்கள் சிலர் மீது பொதுமக்களை மரியாதைக் குறைவாக நடத்துகின்றனர் என்பது உள்ளிட்ட புகார்கள் எழுந்துள்ளன.

    நரிக்குறவ தம்பதிக்கு சென்னையை சேர்ந்த அரசுப் போக்குவரத்து பணியாளர்கள் பாலூற்றி பாதபூஜை செய்யும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    பாரிமுனை நோக்கி சென்ற தடம் எண் 42 பஸ்சில், நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த தம்பதி, மூர் மார்க்கெட் நிறுத்தத்தில் ஏறினர். பாரிமுனை சென்ற அவர்கள், அந்த பஸ் ஓட்டுனர் அப்துல் மன்னா, நடத்துனர் மோகன் ஆகியோரிடம், 'பெரம்பூர் வீனஸ் செல்ல வேண்டும்' எனக்கூற, அங்கிருந்த தடம் எண் 242 பஸ்சிற்கு அவர்களை அழைத்துச் சென்றனர்.

    அங்கு அப்துல்மன்னா, மோகன் ஆகியோருடன், அந்த பஸ்சின் ஓட்டுனர் சதீஷ்பாபு, நடத்துனர் பூமணி ஆகியோர் சேர்ந்து, நரிக்குறவ தம்பதிக்கு காலில்பால் ஊற்றி, மஞ்சள்,குங்குமம் வைத்து, மாலை அணிவித்து, தட்டில் கற்பூரம் ஏற்றி பூஜை செய்து, அழைத்துச் சென்றனர்.

    Also Read : கள்ளக்காதலியின் 13 வயது மகளை 4வது திருமணம் செய்த அரசு பஸ் கண்டக்டர் கைது!

    இது குறித்து, மாநகர பஸ் ஊழியர்கள் கூறுகையில், 'சமீப காலமாக பஸ் நடத்துனர், ஓட்டுனர் குறித்த தவறான கண்ணோட்டம் உள்ளது. 'நாங்கள் அனைவரையும் மதிக்கிறோம். பயணியரை சமமாக நடத்துகிறோம் என்பதை உணர்த்த இப்படி செய்தோம்' என்றனர்.

    Also Read : விழுப்புரத்தில் கொடூரம்... அரசு பேருந்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை... ஓட்டுநர், நடத்துனர்!

    சில நாட்களுக்கு முன்பு, நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்து நெல்லை செல்லும் அரசுப் பேருந்தில் வள்ளியூரைச் சேர்ந்த கணவன், மனைவி, சிறுவன் ஆகிய 3 பேர் கொண்ட நரிக்குறவர் குடும்பத்தினர் ஏறியுள்ளனர். பேருந்து புறப்பட்டு சென்ற சற்று நேரத்திலேயே கணவன், மனைவி இருவரும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

    Also Read : ஓடும் பேருந்தில் மாணவியிடம் அத்துமீறல்... விழுப்புரம் சம்பவத்தால் போக்குவரத்து துறை கவலை - கடும் எச்சரிக்கை

    இதனால் பேருந்தை நிறுத்திய நடத்துநர், கணவன், மனைவி, மற்றும் குழந்தைகளைப் பேருந்தில் இருந்து கட்டாயப்படுத்தி இறக்கியதுடன், அவர்களின் துணி மற்றும் உடமைகளைப் பேருந்தில் இருந்து தூக்கி வெளியே வீசினார்.

    Also Read : பேருந்தில் இருந்து இறக்கி விடப்பட்ட நரிக்குறவர் குடும்பம்.. அமைச்சரிடமிருந்து பறந்த உத்தரவு!

    அந்நேரத்தில் நரிக்குறவர் சிறுவன் அழுதுகொண்டே சத்தமிடுவதும், சாலையோரம் நின்ற ஆட்டோ ஓட்டுநர் நரிக்குறவர் குடும்பத்தினரின் உடமைகளை எடுத்துக் கொடுத்து உதவுகிறார். இதை அங்கு நின்றவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரவவிட்டனர். இதுதொடர்பாக பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தன நிலையில் நரிக்குறவர் குடும்பத்தினரை இறக்கிவிட்ட நடத்துநர் ஜெயதாஸ், ஓட்டுநர் நெல்சன் ஆகியோரைப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் சென்னையில் நரிக்குறவர்களுக்கு போக்குவரத்து ஊழியர்கள் மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடந்துள்ளது.

     
    Published by:Musthak
    First published:

    Tags: Tamilnadu

    அடுத்த செய்தி