Home /News /tamil-nadu /

திருநங்கைகள் கலைக்குழு சார்பாக சென்னையில் நடத்தப்படும் கொரோனோ விழிப்புணர்வு நடன நிகழ்ச்சி..!

திருநங்கைகள் கலைக்குழு சார்பாக சென்னையில் நடத்தப்படும் கொரோனோ விழிப்புணர்வு நடன நிகழ்ச்சி..!

திருநங்கைகள் - கோப்புப் படம்

திருநங்கைகள் - கோப்புப் படம்

ஒரு பகுதியுடன் விழிப்புணர்வை முடித்துவிடாமல் சென்னை முழுவதும் இந்நிகழ்ச்சியை  காவல் துறை உதவியுடன் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

திருநங்கைகள் கலைக்குழு சார்பாக சூளைமேடு சிக்னலில் கொரோனோ விழிப்புணர்வு நடன நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்த விழிப்புணர்வு நடன நிகழ்ச்சியில் சூளைமேடு காவல் அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து காவல் அதிகாரிகளும் இணைந்து மக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

கொரோனோ வைரஸ் பாதிப்பிலிருந்து மக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள அனைவரும் கை கழுவ வேண்டும் என அரசு தொடர்ந்து வழியுறுத்தி வருகிறது. மக்கள் எப்படி கை கழுவ வேண்டும் என திருநங்கைகள் நடனம் மூலம் எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

காவல் அதிகாரிகள் இவர்களுடன் இணைந்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர். இப்பகுதியுடன் முடித்துவிடாமல் சென்னை முழுவதும் இந்நிகழ்ச்சியை  காவல் துறை உதவியுடன் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
Published by:Gunavathy
First published:

Tags: Transgender

அடுத்த செய்தி