• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • திருச்சி பள்ளியில் தேசிய கொடி ஏற்றிய திருநங்கை: தன்னம்பிக்கை அளிப்பதாக பெருமிதம்

திருச்சி பள்ளியில் தேசிய கொடி ஏற்றிய திருநங்கை: தன்னம்பிக்கை அளிப்பதாக பெருமிதம்

தேசிய கொடி ஏற்றிய திருநங்கை சினேகா

தேசிய கொடி ஏற்றிய திருநங்கை சினேகா

திருநங்கை ஓட்டுநரான சினேகா  இரண்டு வருடத்திற்கு மேலாக தற்காலிக ஓட்டுநராகப் பணிபுரிகின்றார்.

  • Share this:
குடியரசு தினத்தில், அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர்கள், அரசு அலுவலகங்களில் உயரதிகாரிகளும் கொடி ஏற்றி வைத்து, இனிப்புகளை வழங்கினர். பல்வேறு இடங்களில் சிறப்பு நிகழ்ச்சிகளையும் நடத்தினர். இந்நிலையில், பள்ளியில்  திருநங்கையை சிறப்பு விருந்தினராக அழைத்து, கவரவித்துள்ளது பலரின் பாராட்டைப் பெற்று கவனத்தையும் ஈர்த்துள்ளது.

நாடு முழுவதும் 72 ஆவது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதன்படி திருச்சியில், மாவட்ட ஆட்சியர் சிவராசு ஆயுதப்படை மைதானத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்கள்,  ஊழியர்களுக்கு விருதுகளை வழங்கினார்.

இதே போல் திருச்சி மாநகராட்சி, ரயில்வே பாதுகாப்பு படை மைதானம், ரயில்வே கோட்ட அலுவலகம், விமான நிலையம், பெல், OFT வளாகங்கள் உட்பட பல்வேறு அரசு மற்றும் அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளில் தேசியகொடியை ஏற்றி வைத்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

இந்நிலையில்,  திருநங்கைகளுக்கு சிறப்பு செய்யும் வகையில் திருச்சி மாநகரம்,  தென்னூர், சுப்பையா நினைவு நடுநிலைப்பள்ளியில் இன்று குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமையாசிரியர் ஜீவானந்தன் தலைமையில் நடைபெற்ற விழாவில், திருச்சி மாவட்ட திட்ட அலுவலகத்தில்,  ஊரக வாழ்வாதார இயக்கத்தில் ஓட்டுநராகப் பணிபுரியும் திருநங்கை எம். சினேகா  சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

அப்போது  தேசத்தலைவர்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து  தேசியக் கொடியினை ஏற்றி வைத்தார் திருநங்கை சினேகா.



இதனைத் தொடர்ந்து விழாவில் பேசிய சினேகா, ஆசிரியர்கள்தான் நாம் அனைவருக்கும் முன் உதாரணமாக விளங்க கூடியவர்கள்.  நாம் கொண்ட லட்சியத்தில் உறுதியாக இருந்தால் வாழ்வில் முன்னேறலாம்.  எங்களை போல உள்ளவர்களுக்கு இவ்வாய்ப்பு கிடைப்பது நாங்கள் மென்மேலும் தன்னம்பிக்கையுடன் அடுத்த இடத்திற்கு செல்ல உதவும்” என்று கூறினார்.

முன்னதாக பள்ளி ஆசிரியை உமா வரவேற்க, பள்ளி ஆசிரியைகள் சரண்யா, சகாயராணி, உஷாராணி ஆகியோர்  ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

மேலும் படிக்க... டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் விவசாயி ஒருவர் உயிரிழந்தார்

திருநங்கை ஓட்டுநரான சினேகா  இரண்டு வருடத்திற்கு மேலாக தற்காலிக ஓட்டுநராகப் பணிபுரிவதாகவும்,  பணி நிரந்தரம் செய்தால் தமக்கு வாழ்வில் பேருதவியாக இருக்கும் என்றும் கூறினார்.

மேலும், அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர்கள், அரசு அலுவலகங்களில் உயரதிகாரிகளும் கொடி ஏற்றி வைத்து, இனிப்புகளை வழங்கினர். பல்வேறு இடங்களில் சிறப்பு நிகழ்ச்சிகளையும் நடத்தினர். இந்நிலையில், பள்ளியில்  திருநங்கையை சிறப்பு விருந்தினராக அழைத்து, கவரவித்துள்ளது பலரின் பாராட்டைப் பெற்று கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Suresh V
First published: