• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சென்னை ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையில் 3-வது பாலினத்தவருக்கான மருத்துவ மையம் திறப்பு!

சென்னை ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையில் 3-வது பாலினத்தவருக்கான மருத்துவ மையம் திறப்பு!

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை

3- வது பாலினத்தவரையும் மதிக்க வேண்டும் இந்த சமுதாயத்தில் அவர்களுக்கும் முக்கியத்துவம் வழங்க வேண்டும் போன்ற உறுதி மொழிகளும் இன்று ஏற்கப்பட்டது.

  • News18
  • Last Updated :
  • Share this:
சென்னை சென்ட் ரல் அருகே உள்ள ராஜீவ்காந்தி பன்னோக்கு மருத்துவமனையில் 3-வது பாலினத்தவருக்கான மருத்துவ மையத்தை குடும்பநலத்துறை மற்றும் சுகாதரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று திறந்து வைத்து வைத்தார்.  

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது, “ தமிழகத்தில் முதன் முதலாக 3-வது பாலினத்தவருக்கென்று மருத்துவ மையம் தொடங்கப்பட்டுள்ளது. ரூ 15 லட்சம் செலவில் அதிநவின வசதிகளை கொண்ட 2 அறைகளை மருத்துவ மையத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் இனி ராஜீவ்காந்தி மருத்துவமனையில் வருகின்ற வெள்ளிக்கிழமை அன்று வாரம் தோறும் 3-வது பாலினத்தவருக்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.

ஏற்கனவே 2 திருநங்கைகளுக்கு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் வேலை வழங்கியது போல 3-ம் பாலினத்தவருக்கு அவர்களின் கல்வி தகுதி அடிப்படையில் வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுப்பதற்கும் உரிய நடவடிக்கைகள் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் போலி மருத்துவமனைகள் சார்ந்த அனைத்து புகார்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து இடங்களிலும் சுகாதரத்துறையின் சார்பில் உணவு பொருட்கள் குறித்து தீவிர சோதனை நடைப்பெற்று வருகிறது”. இவ்வாறு அவர் கூறினார்.

Also see... ஸ்பின்னிங் மில்லில் பெண் ஊழியர் மீது விழுந்த காட்டன் பேல்

Also see... 




உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.





Also see....




அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: