ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மண்வளத்தை பெருக்கி, இயற்கை முறையில் பயிரிட்டு செடிகளை விற்பனை செய்யும் திருநங்கைகள்

மண்வளத்தை பெருக்கி, இயற்கை முறையில் பயிரிட்டு செடிகளை விற்பனை செய்யும் திருநங்கைகள்

இயற்கை முறையில் செடிகளை வளர்க்கும் திருநங்கைகள்

இயற்கை முறையில் செடிகளை வளர்க்கும் திருநங்கைகள்

R_TN_TRY_Transgender SPL PKG_23_09_21_Kathiravan

 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :

  மலட்டு தன்மையாக மாறிவரும் மண்வளத்தை பெருக்குவதற்காக, குழுவாக சேர்ந்து இயற்கை முறையில்  பயிரிட்டு மண்வளத்தைப் பெருக்கி, செடிகளையும்  விற்பனை செய்துவருகின்றனர் திருச்சையைச் சேர்ந்த திருநங்கைகள். சமுதாயத்தில் திருநங்கைகள் மீது தவறான கண்னோட்டம் இருப்பதாகவும் அதை மாற்றம் செய்ய வேண்டும் என்பதற்காக சிறுதொழில் செய்து வருவதாகவும் அவர்கள் பெருமிதத்துடன் தெரிவிக்கின்றனர்.

  திருநங்கைகள் சமூகத்தில் தவறான பார்வையில் இருந்து விலகி முன்னேறி வருகின்றனர். மருத்துவர், இன்ஸ்பெக்டர், எழுத்தாளர் என பல்வேறு துறைகளில் கால்பதித்து வருகின்றனர். அதே போல் சுயதொழில் செய்து முன்னேறியும் பிரதிபலிக்கின்றனர். திருநங்கைகள், திருநம்பிகள் குறித்து சமூகத்தில் பெரும்பாலானோர் மனதில் தவறான புரிதலே இருந்து வருகிறது. இதன் காரணமாக இந்த சமூகத்தினரை  புறந்தள்ளி வைத்து விடுகின்றனர்.

  திருநங்கைகள் கை ஏந்தும் நிலைக்கும், பாலியல் தொழில் ஈடுபட வேண்டிய கட்டாயத்திற்கும் ஆளாக்கப்படுகிறார்கள். இதனாலேயே திருநங்கைகளின் வாழ்வாதாரமே கேள்விக் குறியாக்கப்படுகிறது. இப்படியான சூழலில் தான் இயற்கைக்கு மாறகாக நாமும் அன்றாடும் சாப்பிடும் உணவில் மரபண மாற்றபட்ட தாவரங்கள் மூலம் வரும் காய்கறிகளை நாம் உண்டு வாழ்ந்து வருகின்றோம், மேலும் பல இடங்களில் மண்வளம் குன்றி இருப்பதால் இயற்கை முறையில் வரும் காய்கறிகள் குறைந்து வருகிறது.

  இதனை மீட்டெடுக்கும் விதமாக திருச்சியை சேர்ந்த திருநங்கை கஜோல் திருநங்ககைள் பாலியல் தொழிலில் ஈடுபடாமல் நேர்மையாக வாழ்க்கையில் முன்றேற்ற வேண்டும் என்ற கனவோடு சேப் என்ற அமைப்பு மூலம் ஒன்றினைத்து, தமிழ்நாடு திருநங்கை வாரியத்தில் அரசு சாரா உறுப்பினராகவும் இருந்து வருகிறார். இவர் திருச்சி மாநகர் மலைக்கோட்டை பகுதியை சேர்ந்தவர். இயற்கை மண்வளத்தை அதிகரிக்க வேண்டும் என  நோக்கதோடு செய்பட்ட வருகிறார்.

  இதுகுறித்து திருநங்க கஜோல் கூறுகையில், திருநங்கை குழு முழியமாக 2011ம் ஆண்டு அழகு நிலையம் அமைத்து செயல்படுத்தி வருகிறோம். 2017ம் ஆண்டு தமிழ்நாடு மகளிர் திட்டம் மூலமாக திருச்சி மாநகராட்சி அருகேயுள்ள பூமாலை வணிக வளாகத்தில் விற்பனை கடை ஒன்று ஒதுக்கபட்டு, மூங்கிலில் தயாரிக்கபட்ட பொருட்களை விற்பனை செய்து வந்தனர். இந்த சமுதாயம் புறக்கணித்தாலும் நாம் சமுதாயத்தை புறக்காணிக்காமல் மண்வளம் மலட்டு தன்மையாக மாறி கொண்டு வருகிறது.

  இதனால் மன்வளத்தை பெருக்கும் விதமாக வேளாண் கல்லூரிக்கு சென்று மண்வளத்தை பெருக்குவதற்காக பயிற்சி எடுத்து பின்னர் தங்களது கடைகளில் விற்பனை செய்து  வருகின்றனர். குறிப்பாக மீன் அமிலம், பஞ்சகவ்யா, கால்நடைகள் சானம், வேப்பம் புண்ணாக்கு, தேங்காய் நார் உள்ளிட்ட பொருட்களை கொண்டு இயற்கை முறையில் உரம் தயாரித்து இயற்கை சார்ந்து விற்பனை செய்து வருகிறோம்.

  இவை அனைத்தும் பசுமைபற்று குழு முலமாக செயல்படுத்தி வருகின்றோம். மேலும் இயற்கை பூச்சி விரட்டி, மாடி தோட்டம் போன்றவற்றை செய்து கொடுத்த வருகிறோம், மாடிதோட்ட அமைத்து கொடுத்தவர்களுக்கு வீட்டிற்கு சென்று மாதம் ஒருமுறை செடியின் வளர்ச்சி தன்மை குறித்தும் கண்கானித்து வருகிறோம். தற்போது மூலிகை செடிகள், பூ செடிகள், அழகு செடிகள் என இயற்கை மண்வளத்தை கொண்டு வளர்த்து விற்பனை செய்து சமுதாயத்தில் தங்கள் பங்கு இருக்கவேண்டும் என்பதற்காக இதுபோன்று செய்து வருகிறோம் என பெருமிதத்துடன் தெரிவிக்கின்றனர்.

  இது குறித்து திருநங்கை பூஜா கூறும்போது, மண்வளத்தை பெருக்கும் விதமாகவும், இயற்கை முறையில் செடிகளை வளர்பதற்காகவும் குழுவாக சேர்ந்து இதுபோன்று செய்து வருகிறோம். இதற்கு எங்களுக்கு போதுமான இடவசதி இல்லை, இதற்கு அரசு உதவி செய்யவேண்டும், சமுதாயத்தில் திருநங்கைகள் தவறான கண்னோட்டம் இருக்கு அதை மாற்றம் செய்ய வேண்டும் என்பதற்காக சிறுதொழில் செய்து வருகிறோம், அரசு உதவியும், பொதுமக்கள் ஆதரவு இருந்தால் நாங்கள் மேலும் வளர நல்ல வாய்பாக இருக்கும் என தெரித்தார்.

  மாடி தோட்டம் வைத்திருக்கம் பொன்செல்வி இதுகுறித்து கூறும்போது, மற்ற இடங்களில் செடிகளை வாங்குவதை விட இங்கு இயற்கை மண்வளங்களை கொண்டு செடி விற்பனை செய்வதால் வளர்ச்சியும் அதிமாக இருக்கிறது, மேலும் திருநங்கைகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்பதற்காக இங்கு வந்து வாங்கி செல்கிறோம். மேலும் மாடி தோட்டம் அமைக்க சொல்லி இவர்களிம் கேட்டேன் நேர்த்தியாக மாடி தோட்டமும் அமைத்து கொடுத்துள்ளனர்.

  விலை குறைவாகவும் விற்பனை செய்கின்றனர். மற்ற இடங்களைவிட செடிகளை; பற்றியும் நாம் முழுமையாக தெரிந்து கொள்ள முடிகிறது. மேலும் விட்டில் வந்து கண்கானித்து செய்து வருகின்றனர். பொதுமக்கள் இவர்களை ஒதுக்காமல் ஆதரவாக இருக்கவேண்டும் என கேட்டு கொண்டார்.

  Must Read : இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த 22 மாத குழந்தை - திறமையைக் கண்டு நெகிழும் பெற்றோர்

  ஆதியில் தெரிவதில்லை திருநங்கை என்று. பாதியில் வந்த மாற்றம் தான் இயற்கைக்கு மாறானவர்களாக நினைக்கும் பொதுமக்கள் மத்தியில் இயற்கையோடு ஒன்றி மண்வளத்தை பெருக்கும் திருநங்கைகளை வாழ்த்துகிறது நியூஸ் 18.

  செய்தியாளர் - இ.கதிரவன், திருச்சி

  Published by:Suresh V
  First published:

  Tags: Organic Farming, Transgender