ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம்... முதல்வர் ஸ்டாலின் செயலுக்கு அண்ணாமலை பாராட்டு

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம்... முதல்வர் ஸ்டாலின் செயலுக்கு அண்ணாமலை பாராட்டு

ஸ்டாலின், அண்ணாமலை

ஸ்டாலின், அண்ணாமலை

Bjp Annamalai Tweet | இதுபோன்ற பயங்கரவாத சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என ட்விட்டரில் அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai, India

  கோவையில் காரில் சிலிண்டர் வெடித்த வழக்கை என்ஐஏக்கு(NIA) மாற்ற பரிந்துரைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கைக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வரவேற்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

  கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பேர் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களை அடுத்த மாதம் 8ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  இந்த சம்பவத்தில் அடுத்தடுத்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தேசிய புலனாய்வு முகமை டிஐஜி வந்தனா மற்றும் எஸ்பி ஸ்ரீஜித் ஆகியோர் கோவையில் முகாமிட்டுள்ளனர். நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்ட  அதிகாரிகள் நேற்றிரவு கோவை சென்றடைந்தனர். தொடர்ந்து, கோவையில் உள்ள காவல்துறை உயர் அதிகாரிகளை நேரில் சந்தித்து வழக்கின் விபரங்கள் குறித்து கேட்டறிந்து வருகின்றனர்.

  இந்நிலையில், கோவை கார் சிலிண்டர் வெடிப்பு விபத்து வழக்கின் தன்மையையும் அதில் பன்னாட்டுத் தொடர்புகள் இருக்க வாய்ப்புள்ளதையும் கருத்தில்கொண்டு இவ்வழக்கை NIA-க்கு மாற்ற பரிந்துரைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த நடவடிக்கைக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வரவேற்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

  அதில், “கோவை கார் சிலிண்டர் வெடி விபத்து விசாரணையை என்ஐஏவிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவை வரவேற்கிறோம்.  மேலும் இதுபோன்ற பயங்கரவாத சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

  இதையும் படிங்க : கோவையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் முகாம்.. வெளிவருமா உண்மை?

  மேலும், தேச விரோத சக்திகளை எந்த சமரசமும் இல்லாமல் கையாளுங்கள் என்றும் மாநில காவல்துறையின் உளவுப்பிரிவின் சமீபத்திய குறைபாடுகள், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கிற்க்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்துகிறது என்றும் அவர் கூறியுள்ளார். இதேபோல்,  உள்ளூர் திமுக பிரமுகர்களின் நிர்ப்பந்தம் இன்றி மாநில காவல் துறை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ள அண்ணாமலை, முதலமைச்சராகப் பதவியேற்கும் போது, எல்லாத் திசைகளிலிருந்தும் வரும் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்வீர்கள் என்று நீங்கள் கூறியதை நினைவூட்ட விரும்புகிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

  Published by:Karthi K
  First published:

  Tags: Annamalai, BJP, Chennai