ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

உயிரிழந்த அதிகாரிக்கு பணியிட மாறுதல் வழங்கி உத்தரவு... சிவகாசியில் பரபரப்பு!

உயிரிழந்த அதிகாரிக்கு பணியிட மாறுதல் வழங்கி உத்தரவு... சிவகாசியில் பரபரப்பு!

உயிரிழந்த முத்துகுமரன்

உயிரிழந்த முத்துகுமரன்

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு உயிரிழந்த அதிகாரிக்கு பணியிட மாறுதல் வழங்கி ஆணை பிறப்பித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சிவகாசி நகராட்சி அலுவலகத்தில் வருவாய் அதிகாரியாக பணியாற்றியவர் முத்துக்குமரன். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துவிட்டார்.

இந்நிலையில் தமிழ்நாடு நகராட்சி நிர்வாக ஆணையர் சார்பில் கடந்த 27-ம் தேதி அரசு  அலுவலர்களுக்கான இட ஒதுக்கீடும் இட மாற்றம் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதில் 11 அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. அதில் முதல் பெயராக சிவகாசி நகராட்சி அலுவலகத்தில் பணியாற்றி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு உயிரிழந்த முத்துக்குமரன் பெயர் இடம் பெற்றிருந்தது.

முத்துகுமரனை சிவகாசி நகராட்சி அலுவலகத்தில் இருந்து அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பானது நகராட்சி ஊழியர்கள் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தவறு எதனால் ஏற்பட்டது என்பது தொடர்பாக அதிகாரிகள் விசாரனை நடத்தி வருகின்றனர்.

Also see...

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Sivakasi