Home /News /tamil-nadu /

ரூ.2.10 கோடி ஊழல் செய்த அதிகாரிக்கு பணியிட மாற்றம் மட்டும்தான் தண்டனையா? - அன்புமணி கேள்வி

ரூ.2.10 கோடி ஊழல் செய்த அதிகாரிக்கு பணியிட மாற்றம் மட்டும்தான் தண்டனையா? - அன்புமணி கேள்வி

அன்புமணி ராமதாஸ்

அன்புமணி ராமதாஸ்

கையூட்டு பணத்துடன் சிக்குபவர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட வேண்டும் என்று அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளதாக கூறியுள்ள அன்புமணி ராமதாஸ், கையூட்டு பெற்ற அதிகாரியை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்கவும் ...
    போக்குவரத்துத் துறையில் பணியிட மாற்றம் செய்ய ஊழலில் ஈடுபட்ட அதிகாரிக்கு பணியிட மாற்றம் தான் தண்டனையா? என்று பாமக இளைஞரணித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, "சென்னை போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் கடந்த 14-ஆம் தேதி நடத்தப்பட்ட ஊழல் ஒழிப்பு சோதனையில் ரூ.35 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அதற்கு காரணமான துணை ஆணையர் நடராஜன் எந்த தண்டனையும் இல்லாமல் நெல்லைக்கு இடமாற்றம் மட்டும் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ரூ.35 லட்சம் பணத்துடன் சிக்கிய அதிகாரி குறித்து விசாரித்தபோது, அவர் பதவி உயர்வு வழங்க 7 பேரிடமிருந்து தலா ரூ. 5 லட்சம் வசூலித்தது உறுதியாகியுள்ளது.

    பதவி உயர்வுக்காக மேலும் 35 பேரிடமிருந்து ரூ.1.75 கோடி வசூலித்ததும் தெரியவந்துள்ளது. அவர் மீது ஊழல் தடுப்பு காவல்துறை வழக்கும் பதிவு செய்திருக்கிறது.

    இதையும் படிங்க - எதுவுமே தெரியாது, சிசிடிவியை அகற்ற கூறவில்லை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் வாக்குமூலம்

    சம்பந்தப்பட்ட அதிகாரி 2019-ஆம் ஆண்டில் செங்கல்பட்டு ஆர்.டி.ஓ. ஆக இருந்த போது அவரது அலுவலகத்தில் ஊழல் தடுப்பு பிரிவு சோதனையிட்டு, ரூ.88 லட்சம் பணத்தை கைப்பற்றியதுடன், வழக்கும் பதிந்தது. அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை அவரது துறையினரே பட்டாசு வெடித்துக் கொண்டாடியுள்ளனர்.

    கையூட்டு பணத்துடன் சிக்குபவர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட வேண்டும் என்று அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

    இதையும் படிங்க - பால் குடத்துடன் சென்ற இந்துக்கள்.. போராட்டத்தை நிறுத்தி வழிவிட்ட இஸ்லாமியர்கள்

    ஆனால், எந்த சோதனையும், எந்த கைது நடவடிக்கையும் இல்லாமல் இட மாற்றத்துடன் அந்த ஊழல் அதிகாரி தப்பவிடப்பட்டிருக்கிறார். இது பெரும் அநீதி. ரூ.100 கையூட்டு வாங்கியதற்காக கிராம நிர்வாக அதிகாரிகள் கைது செய்யப்படுகின்றனர். ஆனால், ரூ. 2.10 கோடி கையூட்டு வாங்கிய அதிகாரி தப்பவிடப்படுகிறார் என்றால், அது ஊழலை ஒழிக்க உதவாது. ஊழல் அதிகாரியை பணியிடை நீக்கம் செய்வதுடன், கைது செய்யவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.'' என்று கூறியுள்ளார்.
    Published by:Musthak
    First published:

    Tags: Anbumani

    அடுத்த செய்தி