ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

புகைப்படங்களை மொபைலில் இருந்து உங்களின் லேப்டாப்பிற்கு எளிதாக பகிர்ந்து கொள்வதற்கான வழிகள்

புகைப்படங்களை மொபைலில் இருந்து உங்களின் லேப்டாப்பிற்கு எளிதாக பகிர்ந்து கொள்வதற்கான வழிகள்

ஐபோன் பயன்படுத்துவோர் தங்களின் புகைப்படங்களை விண்டோஸ் லேப்டாப்பிற்கு பகிர iTunes செயலியை டவுன்லோடு செய்ய வேண்டும்.

ஐபோன் பயன்படுத்துவோர் தங்களின் புகைப்படங்களை விண்டோஸ் லேப்டாப்பிற்கு பகிர iTunes செயலியை டவுன்லோடு செய்ய வேண்டும்.

ஐபோன் பயன்படுத்துவோர் தங்களின் புகைப்படங்களை விண்டோஸ் லேப்டாப்பிற்கு பகிர iTunes செயலியை டவுன்லோடு செய்ய வேண்டும்.

  • 3 minute read
  • Last Updated :

பொதுவாக எங்கு சென்றாலும் போட்டோ எடுக்க கூடிய பழக்கம் பெரும்பாலான மக்களுக்கு உள்ளது. இப்படி எடுக்க கூடிய போட்டோக்களை அதிக ஸ்டோரேஜ் உள்ள போன்களில் எளிதாக சேமித்து கொள்ளலாம். இதுவே அடிக்கடி நிறைய போட்டோக்கள் அல்லது வீடியோக்களை எடுத்து கொண்டே இருப்பதால் மொபைலில் ஸ்டோரேஜ் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. இது போன்ற சூழலில் மொபைலில் உள்ள புகைப்படங்கள் மற்றும் பிற தரவுகளை உங்களின் லேப்டாப்பிற்கு மாற்றி கொள்ளலாம். இதனால் மொபைலுக்கு கூடுதல் ஸ்டோரேஜ் கிடைக்கும். இதை எளிதாக பகிர கூடிய வழிகளை பற்றி இனி தெரிந்து கொள்வோம்.

யூ.எஸ்.பி வழியாக :

மொபைலில் இருந்து விண்டோஸ் ஓ.எஸ் உள்ள லேப்டாப்பிற்கு உங்களது புகைப்படங்களை எளிதில் பகிர கூடிய வழி தான் இந்த யூ.எஸ்.பி (USB) முறை. இதற்கு யூ.எஸ்.பி கேபிள் உங்களிடம் இருந்தால் மட்டும் போதும். இதை உங்கள் மொபைலுடன் இணைத்துவிட்ட பிறகு, அதில் சில ஆப்ஷன்கள் காட்டப்படும். அவற்றில் 'File Transfer' ஆப்ஷனை கிளிக் செய்து உங்களுக்கு வேண்டியதை உங்கள் மொபைலில் இருந்து லேப்டாப்பிற்கு பகிர்ந்து கொள்ளுங்கள். பகிர்ந்த பிறகு இணைப்பை துண்டித்து கொள்ளலாம். இதே போன்று தான் மேக் லேப்டாப்பிலும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

ஐபோனில் இருந்து பகிர :

ஐபோன் பயன்படுத்துவோர் தங்களின் புகைப்படங்களை விண்டோஸ் லேப்டாப்பிற்கு பகிர iTunes செயலியை டவுன்லோடு செய்ய வேண்டும். பிறகு யூ.எஸ்.பி கேபிள் பயன்படுத்தி இணைத்து விட்டு, 'Trust' என்கிற நோட்டிபிகேஷன் பாப்-அப் ஆனதும் அதை அனுமதிக்க வேண்டும். நீங்கள் விண்டோஸ் 8 அல்லது 10 பயன்படுத்துபவராக இருந்தால் ஸ்டார்ட் மெனுவிற்கு சென்று போட்டோஸ் செயலியை பயன்படுத்தலாம். அடுத்தாக அதில் வலப்பக்கத்தில் மேற்பகுதியில் "Import" என்கிற ஆப்ஷன் இருக்கும். அதை கிளிக் செய்து 'From a USB device' என்பதை டேப் செய்யவும். பிறகு உங்களுக்கு வேண்டியவற்றை தேர்வு செய்து, லேப்டாப்பிற்கு பகிர்ந்து கொள்ளலாம்.

Also read... புதிதாக 17.6 லட்சம் மொபைல் யூஸர்களை பெற்ற ஜியோ - பலத்த அடிவாங்கிய ஏர்டெல் மற்றும் விஐ!

மேலும் ஐபோனில் இருந்து மேக் லேப்டாப்பிற்கு பகிர யூ.எஸ்.பி கேபிளை இணைத்து விட்டு, 'Trust' என்கிற நோட்டிபிகேஷன் பாப்-அப் ஆனதும் அதை அனுமதிக்க வேண்டும். அடுத்ததாக 'Import to' ஆப்ஷனை செலக்ட் செய்த பின், 'Import All New Items' என்பதை கிளிக் செய்ய வேண்டும். மேலும் குறிப்பிட்ட சிலவற்றை பகிர மட்டும் பகிர 'Import Selected' என்பதை டேப் செய்து பகிரலாம்.

ஆப் மூலம் பகிர :

போனில் இருந்து லேப்டாப்பிற்கு பகிர செயலிகளை பயன்படுத்தலாம். இதற்கு 'Your Phone' என்கிற ஆப்பை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள். இதை உங்களின் விண்டோஸ் அல்லது மேக் லேப்டாப்பிலும் டவுன்லோடு செய்துகொள்ள வேண்டும். அடுத்ததாக செட்டிங்ஸிற்கு சென்று Your Phone ஆப்பை செலக்ட் செய்து 'Add a phone' என்பதை கிளிக் செய்யவும். பிறகு உங்கள் மொபைலில் பாப்-அப் நோட்டிபிகேஷன் வரும். அதில் உங்கள் மொபைல் ஆண்ட்ராய்டு அல்லது ஐபோன் என்பதை தேர்வு செய்யவும். அடுத்து, QR கோடு அல்லது மைக்ரோசாஃப்ட் அக்கவுண்ட் பயன்படுத்தி உங்கள் மொபைலை லேப்டாப் உடன் இணைத்து விடுங்கள்.

Also read... பிறருக்கு தெரியாதபடி ரகசியமாக இன்ஸ்டா ஸ்டோரீஸ்களை பார்ப்பது எப்படி?

இதே போன்று லேப்டாப்பில் “Yes, I finished installing Your Phone Companion” என்கிற ஆப்ஷனை கிளிக் செய்து, பிறகு 'Open QR Code' என்பதை டேப் செய்ய வேண்டும். உங்களின் மொபைலை லேப்டாப்புடன் இணைக்க அதிலுள்ள QR கோடை ஸ்கேன் செய்து விடுங்கள். அடுத்து, இதில் “Let’s Go” ஆப்ஷன் தோன்றும், அதை கிளிக் செய்து பிறகு “My Devices” என்கிற பிரிவில் உங்களின் மொபைல் தோன்றும். பிறகு செட்டிங்ஸ்-க்கு சென்று General என்பதை தேர்வு செய்து அதில் “Allow this app to show photos from my phone” என்பதை டேப் செய்யவும். இப்போது உங்களின் லேப்டாப்பில் எல்லா புகைப்படங்களும் தோன்றும். இதை பயன்படுத்தி அனைத்தையும் பகிர்ந்து கொள்ளலாம். ஒருவேளை உங்களால் போட்டோக்களை பார்க்க முடியவில்லை என்றால் “See photos” என்பதை தேர்வு செய்ய வேண்டும். பிறகு போட்டோக்களை ரைட்-கிளிக் செய்து சேமித்து கொள்ளலாம்.

First published: