மாண்டஸ் புயல் புதுச்சேரி -ஸ்ரீஹரிகோட்டா இடையே இன்று நள்ளிரவுக்குள் முழுமையாக கரையை கடக்க உள்ளது. தற்போது சென்னையிலிருந்து 90 கிமீ தொலைவில் நிலைகொண்டுள்ள புயல், மாமல்லபுரத்தில் கரையை கடந்து வருகிறது
சென்னை புறநகர் ரயில் சேவை பாதிப்பு புயல் கரையை கடக்க துவங்கியதால் சென்னையில் இருந்து செங்கல்பட்டு செல்லக்கூடிய புறநகர் ரயில்களும் மதுரை விழுப்புரம் திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்லும் இரவு நேர ரயில்களும் தற்காலிகமாக சில மணி நேரம் சிக்னல்களில் நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கு புறப்படக்கூடிய பேருந்துகள் கிழக்கு கடற்கரை சாலைக்கு முன்னதாக இரண்டு மணி நேரம் நிறுத்தி வைக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
புயல் கரையை கடக்க துவங்கியுள்ளதால் பேருந்துகளை தற்பொழுது இயக்க வேண்டாம் எனவும் புயல் கரையை கடந்த பிறகு பேருந்த இயக்கவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, Cyclone Mandous, Train, Weather News in Tamil