முகப்பு /செய்தி /தமிழ்நாடு / அரக்கோணம் ரயில்வே யார்டில் பராமரிப்பு பணிகள்.. ரயில் சேவை மாற்றம் குறித்த தகவல் தெரிந்துக்கொள்ளுங்கள்

அரக்கோணம் ரயில்வே யார்டில் பராமரிப்பு பணிகள்.. ரயில் சேவை மாற்றம் குறித்த தகவல் தெரிந்துக்கொள்ளுங்கள்

அரக்கோணம் ரயில் நிலையம்

அரக்கோணம் ரயில் நிலையம்

Arakkonam : அரக்கோணம் ரயில் நிலையம் அருகே உள்ள யார்டில் இன்றும் நாளையும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால், அந்த வழியாகச் ரயில்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :

அரக்கோணம் ரயில் நிலையம்  அருகே உள்ள யார்டில் இன்று மற்றும் நாளை (மே- 17, 18 தேதிகளில்) காலை 9.45.மணி முதல் பகல் 1.45 மணி வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளனர்.

இந்த பராமரிப்பு பணி காரணமாக 2 நாட்களும் ராணிப்பேட்டை மாவட்டம்  அரக்கோணத்தில் இருந்து சென்னை மற்றும் அரக்கோணம் காட்பாடி என இரண்டு மார்க்கத்திலும் பெங்களூரில் இருந்து  சென்னை செல்லும் லால்பாக் எக்ஸ்பிரஸ் (12608/12609), கோயம்புத்துாரில் இருந்து சென்னை செல்லும் இன் டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (12680/12679), மைசூரில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்(12610), சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் எக்ஸ்பிரஸ் (12607) ஆகிய ரயில்கள் காட்பாடி வரை மட்டுமே இயக்கப்படுகிறது.

இந்த ரயில்கள் அரக்கோணம், சென்னை சென்ட்ரல் செல்லாது.  மேலும், திருப்பதியில் இருந்து சென்னை செல்லும் (16054/16053 எக்ஸ்பிரஸ் 17 மற்றும் 18 தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. ஜார்க்கண்ட் மாநிலம் தானாபூரில் இருந்து பெங்களூர் செல்லும் ரயில் ரேணிகுண்டா, திருத்தணி, வழியாக செல்லும் என்றும், பெரம்பூர் செல்லாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல் அரக்கோணத்தில் இருந்து சென்னை செல்லும் சில மின்சார ரயில்களும் கடம்பத்தூரில் இருந்து இயக்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாக செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

இந்த நடைமுறை நடைபெறும் பராமரிப்பு பணிகளுக்காக வருகின்ற 4 வாரங்களில் செவ்வாய் மற்றும் புதன் ஆகிய இரண்டு நாட்களும் இந்த திட்டத்தை பின்பற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Must Read : நெல்லை கல்குவாரி விபத்து.. பாறை இடுக்குகளில் இருந்து லாரி கிளீனர் முருகன் சடலமாக மீட்பு.. தொடரும் சோகம்

அதேபோல் பராமரிப்பு பணிகளுக்காக ரயில்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தாலும் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டு உள்ள ரயில் பயணிகள் இந்த மாற்று அறிவிப்பால் முன் பதிவு செய்யப்பட்டுள்ள ரயில் பயணிகள் குழப்பமடைந்துள்ளனர். அவர்களுக்கான எந்த அறிவிப்பும் தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் - க.சிவா, ராணிப்பேட்டை.

First published:

Tags: Arakkonam, Railway, Southern railway, Train