உள்ளாட்சித் தேர்தல்... தேர்தல் அதிகாரிகளுக்கு சென்னையில் இன்று பயிற்சி

உள்ளாட்சித் தேர்தல்... தேர்தல் அதிகாரிகளுக்கு சென்னையில் இன்று பயிற்சி
வாக்குப் பதிவு
  • News18
  • Last Updated: October 10, 2019, 8:31 AM IST
  • Share this:
உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் சென்னையில் இன்று பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் உள்ளாட்சித் தேர்தலுக்கான பயிற்சிக்கு மாநில தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. இதையடுத்து அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் சென்னையில் இன்று பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

ஏற்கெனவே மாவட்ட தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் 5 அலுவலர்கள் வரை இந்த பயிற்சியில் பங்கேற்க உள்ளார்கள். வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாளுதல், முன்னேற்பாடுகளை செய்தல் தொடர்பாக இந்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது.


இங்கே பயிற்சி பெறும் அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள மற்ற அதிகாரிகளுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் பயிற்சி வழங்குவார்கள். இதனிடையே உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி தமிழகத்தில் கூடுதல் ஆணையர்கள் மற்றும் டிஎஸ்பி-க்கள் என 18 உயரதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Also watch

First published: October 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...