தமிழ்நாடு முழுவதும் பயிற்சி மருத்துவர்கள் கருப்பு பட்டை அணிந்து போராட்டம்

பயிற்சி மருத்துவர்கள் போராட்டம்

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் பயிற்சி மருத்துவர்களுக்கு மிக குறைந்த ஊதியம் குற்றம்சாட்டி உள்ளனர்.

 • Share this:
  தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயிற்சி மருத்துவர்கள் இன்று கருப்பு பட்டை அணிந்து போராட்டம் நடத்தினர்.

  தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் உள்ள பயிற்சி மருத்துவர்கள் தங்களது ஊதியத்தை அதிகரிக்க வேண்டுமென வலியுறுத்தில கறுப்பு பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்த போராட்டம் தொடர்பாக அவர் கூறுகையில்,

  தங்களுக்கு வழங்கப்படும் மாத ஊதியமாக ரூபாய் 37 ஆயிரத்தை உயர்த்த கோரி இந்த போராட்டத்தை அவர்கள் நடத்தினர். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் பயிற்சி மருத்துவர்களுக்கு மிக குறைந்த ஊதியம் வழங்கப்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டினர். டெல்லியில் ரூ.90,000 குஜராத்தில் ரூ.84,000 ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ரூ.70,000 அஸ்ஸாம்  மற்றும் பீகார் மாநிலங்களில் ரூ.65.000  கேரள மாநிலத்தில் ரூ.58,000 பயிற்சி மருத்துவர்களுக்கு வழங்கப்படுவதாக தெரிவித்தனர்.  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதுதொடர்பாக அரசிடம் தொடர்ந்து பல மாதங்களாக முறையிட்டு வருவதாகவும் ஆனால் அரசு உரிய பதில் அளிக்கவில்லை என்றும் தெரிவித்தனர். தமிழ்நாடு முழுவதும் சுமார் 6 ஆயிரம் பயிற்சி மருத்துவர்கள் பணியில் உள்ளனர். எம்பிபிஎஸ் படித்து முடித்து முதுநிலை படிப்புக்கான தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று முதுநிலை படிப்பில் சேர்ந்து இருப்பவர்கள் பயிற்சி மருத்துவர்கள் எனப்படுவர்.
  Published by:Vijay R
  First published: