முகப்பு /செய்தி /தமிழ்நாடு / செம ஸ்பீடு.. இனி நேரம் மிச்சமாகும்.. ரயில்வே முக்கிய அறிவிப்பு..!

செம ஸ்பீடு.. இனி நேரம் மிச்சமாகும்.. ரயில்வே முக்கிய அறிவிப்பு..!

ரயில்

ரயில்

பொதுமக்கள் அனுமதியின்றி கடக்கும் ரயில் பாதைகளில் தடுப்பு சுவர்கள் கட்டுவது உள்ளிட்ட மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

பயண நேரத்தை குறைக்கும் வகையில் தமிழ்நாட்டில் முக்கிய ரயில் பாதைகளில் இயக்கப்படும் ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, சென்னையிலிருந்து ரேணிகுண்டா மற்றும் அரக்கோணத்திலிருந்து ஜோலார்பேட்டை வரை இயக்கப்படும் ரயில்களின் வேகத்தை 110 கிலோமீட்டரில் இருந்து 130 கிலோமீட்டராக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து ஜோலார்பேட்டை, பெங்களூர், மும்பை உள்ளிட்ட வழித்தடங்களில் செல்லும் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க திட்ட அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், ஒப்புதல் வழங்கப்பட்ட பிறகு ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

பிப்ரவரி மாதம் முதல் சென்னை - பெங்களூரு வழித்தடத்தில் ரயில்கள் 160 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி வளைவுகளை சீர்படுத்துவது, ரயில் பாதைகளில் பொதுமக்கள் அனுமதியின்றி கடக்கும் இடங்களில் தடுப்பு சுவர்கள் கட்டுவது உள்ளிட்ட மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

First published:

Tags: Southern railway, Train