தீபாவளி பண்டிகை: சிறப்பு ரயில்களில் டிக்கெட்டுகள் விற்பனை அதிகரிப்பு

கொரோனா பரவலுக்கு மத்தியிலும், தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்கான சிறப்பு ரயில் டிக்கெட்டுகளின் முன்பதிவுகள் வேகமெடுத்துள்ளது.

தீபாவளி பண்டிகை: சிறப்பு ரயில்களில் டிக்கெட்டுகள் விற்பனை அதிகரிப்பு
ரயில் (கோப்புப்படம்)
  • News18 Tamil
  • Last Updated: September 10, 2020, 2:32 PM IST
  • Share this:
ஊரடங்கு தளர்வு காரணமாக தமிழகத்தில் கடந்த ஏழாம் தேதி முதல் 13 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வழக்கமான ரயில் போக்குவரத்து எதுவும் தொடங்கப்படாததால், சிறப்பு ரயில்களிலேயே பெரும்பாலான மக்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், வரும் நவம்பர் மாதம் 14ம் தேதி தீபாவளி கொண்டாடப்பட இருப்பதால், சிறப்பு ரயில்களில் டிக்கெட்டுகள் விற்பனை வேகமெடுத்துள்ளது. குறிப்பாக கன்னியாகுமரி சிறப்பு ரயிலில் நவம்பர் 12 மற்றும் 13ம் தேதி நெல்லை செல்வதற்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து காத்திருப்போர் பட்டியலுக்கு வந்து விட்டது.

மேலும் படிக்க...10-ம் வகுப்பு மாணவனை சரமாரியாக கத்தியால் தாக்கிய கும்பல்... சென்னையில் பரபரப்பு


இதேபோல், தூத்துக்குடி, மதுரை ரயில்களிலும் முன்பதிவுக்கு மக்கள் ஆர்வம் காட்டி வருவதால், தீபாவளியை முன்னிட்டு கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
First published: September 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading