முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ரயில் பயணிகள் கவனத்திற்கு... அந்தியோதயா ரயில் இங்கெல்லாம் போகாது... தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு..!

ரயில் பயணிகள் கவனத்திற்கு... அந்தியோதயா ரயில் இங்கெல்லாம் போகாது... தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு..!

ரயில்

ரயில்

Train Stopped | ரயில் பாதையில் மேற்கொள்ளப்படும் பணிகள் காரணமாக சில இடங்களில் ரயில் சேவைகள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ரயில் பாதையில் மேற்கொள்ளப்படும் பணிகள் காரணமாக திருச்சி - திருவனந்தபுரம் மற்றும் சென்னை - நாகர்கோவில் இடையேயான அந்தியோதயா ரயில்கள் பகுதி அளவுக்கு ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

திருவனந்தபுரம் கோட்டத்தில் உள்ள மேலப்பாளையம் - நாங்குநேரி ரயில் நிலையங்கள் இடையே இரட்டை ரயில் பாதை இணைப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக, திருநெல்வேலி வழியாக நாகர்கோவில் மற்றும் திருவனந்தபுரத்திற்கு ரயில் சேவை நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை தாம்பரம் - நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ், நாளை மறுதினம் முதல் 21ம் தேதி வரை திருநெல்வேலி - நாகர்கோவில் இடையே ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலி வரை மட்டுமே ரயில் இயக்கப்படும் எனவும், மறு மார்க்கத்தில் நாகர்கோவிலுக்குப் பதிலாக திருநெல்வேலியில் இருந்து புறப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல, திருச்சி - திருவனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் வரும் 17-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை திருநெல்வேலி - திருவனந்தபுரம் இடையே ரத்து செய்யப்படுவதால், திருச்சியில் புறப்படும் ரயில் திருநெல்வேலி வரை மட்டுமே இயக்கப்படும் எனவும், மறு மார்க்கத்தில் திருவனந்தபுரத்திற்குப் பதிலாக திருநெல்வேலியில் இருந்து ரயில் புறப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Railway, Southern railway, Train