பாம்பன் பாலத்தில் கிரேன் மோதி விபத்து...சென்னையிலிருந்து ராமேஸ்வரம் வந்த விரைவு ரயில் நிறுத்தம்

ரயில்வே பொறியாளர்கள் மற்றும் கட்டுமான பொறியாளர்கள் பாம்பன் ரயில் பாலத்தில் ஏதேனும் சேதம் ஏற்பட்டுள்ளதாக என்றும் மோதிய கிரேனை படகுகள் மூலம் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

  • Share this:
பாம்பன் பாலத்தில் புதிய பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில் இதற்காக இரும்பு மிதவைகளில் கிரேன் அமைக்கப்பட்டு பாம்பன் தூக்குப் பாலம் அருகே நிறுத்தப்பட்டு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு வீசிய பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக அருகில் இருந்த மிதவை மற்றும் அதிலிருந்த கிரேன், மிக அருகில் உள்ள தூக்கு ரயில் பாலத்தில் மோதியது. இதனால் சென்னையில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி வந்த அதிவிரைவு ரயில் மண்டபத்திலேயே நிறுத்தப்பட்டது.இதனையடுத்து ரயில்வே பொறியாளர்கள் மற்றும் கட்டுமான பொறியாளர்கள் பாம்பன் ரயில் பாலத்தில் ஏதேனும் சேதம் ஏற்பட்டுள்ளதாக என்றும் மோதிய கிரேனை படகுகள் மூலம் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல் தூக்கு பாலத்தில் இருந்து சற்று தூரத்தில் மற்றொரு மிதவை கிரேன் பாலத்தில் மோதும் தருவாயில் உள்ளது. அதையும் மீட்கும் பணியில் ரயில்வே ஊழியர்களும் பொறியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
First published: October 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading