ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சென்னைக்கு 2 நாட்கள் மட்டுமே ரயில் சேவை...! முதல்வரின் கோரிக்கையை ஏற்றது ரயில்வே

சென்னைக்கு 2 நாட்கள் மட்டுமே ரயில் சேவை...! முதல்வரின் கோரிக்கையை ஏற்றது ரயில்வே

கோப்புப்படம்

கோப்புப்படம்

சென்னைக்கு வருகிற 14, 16 ஆகிய 2 தேதிகளில் மட்டுமே ரயில் சேவை இயக்கப்படும் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  தமிழக முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று சென்னைக்கு 2 நாள்கள் மட்டுமே ரயில் சேவை இயக்கப்படும் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

  சென்னையில் நாளுக்கு நாள் கொரோனோ நோய் தொற்று அதிகரித்து வருவதால், ரயில், விமான போக்குவரத்து உள்ளிட்ட சேவைகளை மே 31-ம் தேதி வரை அனுமதிக்க வேண்டாம் என பிரதமரிடம் தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி  காணொலிக் காட்சி மூலம் வலியுறுத்தினார்.

  இந்த நிலையில், சென்னைக்கு வருகிற 14, 16 ஆகிய 2 தேதிகளில் மட்டுமே ரயில் சேவை இயக்கப்படும் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட காரணத்தால் இரண்டு நாட்களுக்கு மட்டும் ரயில்கள் இயங்கும் என்றும் ரயில்வே அமைச்சகம் கூறியுள்ளது.

  இதனிடையே, குளிர்சாதன வசதி கொண்ட ராஜ்தானி ரயிலில் வரும் 1,100 பயணிகளை ஒரே நேரத்தில் பிசிஆர் சோதனை செய்வதில் நடைமுறை சிக்கல்கள் இருப்பதை கருத்தில் கொண்டு தமிழகத்திற்கு வந்த பின்பு ரயில்வே துறை மூலம் பயணிகளை பரிசோதித்து தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வரை சென்னைக்கு வழக்கமாக இயக்கப்படும் ரயில்களை இயக்க வேண்டாம் என்றும் மத்திய உள்துறை மற்றும் ரயில்வே துறை அமைச்சர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


  Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


  Published by:Vijay R
  First published:

  Tags: CoronaVirus, Indian Railways, Lockdown