Home /News /tamil-nadu /

கோவையில் ரயிலில் அடிபட்ட ஆண் யானையின் நிலை கவலைக்கிடம்

கோவையில் ரயிலில் அடிபட்ட ஆண் யானையின் நிலை கவலைக்கிடம்

கோவையில் ரயிலில் அடிபட்ட ஆண் யானை

கோவையில் ரயிலில் அடிபட்ட ஆண் யானை

கோவை நவக்கரை பகுதியில் ரயில் மோதியதில் படுகாயமடைந்த ஆண் காட்டு யானைக்கு கால்நடை மருத்துவர்கள் குழுவினர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    கோவை மாவட்டம் மதுக்கரை அருகே ரயிலில் அடிபட்டு படுகாயமடைந்த யானையின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

    கோவை நவக்கரை அருகே ரயிலில் அடிப்பட்டு ஆபத்தான நிலையில் உள்ள ஆண் யானைக்கு சாடிவயல் யானை முகாமில் இரண்டாவது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. யானையின் பின் பகுதியில் எழும்புகள் உடைபட்டுள்ளதால் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாக கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    தண்ணீர், தர்பூசணி, வெல்லம், போன்ற உணவுகளை கொடுத்துள்ளதாகவும், தொடர்ச்சி ஊசி மூலம் மருத்து செலுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

    Elephant

    கோவையில் ரயிலில் அடிபட்ட ஆண் யானை


    கோவை மாவட்டம் மதுக்கரை அருகேயுள்ள நவக்கரை பிரிவு பகுதியில் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற காட்டு யானை ரயில் மோதி படுகாயமடைந்தது. வாளையார் ஆற்றில் தண்ணீர் அருந்திவிட்டு தண்டவாளத்தை கடக்க யானை முயன்றபோது அவ்வழியே சென்ற திருவனந்தபுரம் - சென்னை விரைவு ரயில் மோதி விபத்து ஏற்பட்டது.

    இந்த விபத்தில் யானைக்கு, தலை மற்றும் காலில் காயம் ஏற்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த வனத்துறையினர் யானைக்கு தொடர்ந்து இரண்டாவது நாளாக சிகிச்சை அளித்து வருகின்றனர்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Coimbatore, Elephant

    அடுத்த செய்தி