விரைவு ரயில் மோதி விபத்து... தாகம் தீர்க்க வந்த யானைக்கு நேர்ந்த சோகம்

காட்டு யானை

மதுக்கரை பகுதியில் இருப்புப்பாதையில் அடிக்கடி விபத்து ஏற்படுவதால், ரயில்வே மற்றும் வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 • Share this:
  கோவை மாவட்டம் மதுக்கரை அருகேயுள்ள நவக்கரை பிரிவு பகுதியில் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற காட்டு யானை ரயில் மோதி படுகாயமடைந்தது.

  வாளையார் ஆற்றில் தண்ணீர் அருந்திவிட்டு தண்டவாளத்தை கடக்க யானை முயன்றபோது அவ்வழியே சென்ற திருவனந்தபுரம் - சென்னை விரைவு ரயில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் யானைக்கு, தலை மற்றும் காலில் காயம் ஏற்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த வனத்துறையினர் யானைக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.  மதுக்கரை பகுதியில் இருப்புப்பாதையில் அடிக்கடி விபத்து ஏற்படுவதால், ரயில்வே மற்றும் வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  Published by:Sankaravadivoo G
  First published: