ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

இந்தியாவில் 60 யானைகள் ரயில் மோதி உயிரிழப்பு..!

இந்தியாவில் 60 யானைகள் ரயில் மோதி உயிரிழப்பு..!

கோப்புப் படம்

கோப்புப் படம்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

கடந்த 2016ஆம் ஆண்டு முதல் 2019வரை இந்தியாவில் உள்ள 13 மாநிலங்களில் மட்டும் 60 யானைகள் ரயில் மோதி உயிரிழந்துள்ளன.

வனப்பகுதிகளுக்குள் மேற்கொள்ளப்படும் பல்வேறு வகையான திட்டங்களால் யானை உள்ளிட்ட வனவாழ் உயிரினங்களின் வாழிடம் மிகப்பெரிய அளவில் குறைந்துள்ளது. மேலும் ஆங்காங்கே யானை வழித்தடங்களில் அமைக்கப்பட்டுள்ள செங்கல் சூளைகள், குவாரிகள் மற்றும் பயிர்களைக் காப்பதற்கு அமைக்கப்படும் வேலிகள் உள்ளிட்டவற்றையாலும் யானைகள் தங்கள் வலசைப் பாதைகளை மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு மனிதர்களால் தள்ளப்பட்டுள்ளது.

இவையனைத்தையும் விட தற்போது யானைகளுக்கு மிகவும் ஆபத்தாகியுள்ளது வனப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள ரயில்வே தடங்கள்தான். உணவு மற்றும் தண்ணீருக்காக யானைகள் தினமும் பல நூறு கிலோமீட்டர் தூரம் பயணம் மேற்கொள்கையில் ரயில்வே தடங்களை கடக்க வேண்டியுள்ளது. அப்போது ரயில்மோதி பரிதாபமாக உயிரிழக்கின்றன.

அண்மையில் நாடாளுமன்றத்தில் சுற்றுச்சூழல் மற்ற வனத்துறை இணை அமைச்சர் பாபுல் சுப்ரியோ அளித்த தகவலின்படி 2016ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் அஸ்ஸாம், மேற்கு வங்காளம், ஜார்கண்ட், கேரளா, தமிழ்நாடு, ஒடிஷா, உத்தர பிரதேசம், கர்நாடகா, உத்தரகாண்ட், திரிபுரா ஆகிய 13 மாநிலங்களில் மட்டும் 60 யானைகள் உயிரிழந்துள்ளன.

அதிகபட்சமாக அஸ்ஸாமில் 22 யானைகளும், மேற்கு வங்காளத்தில் 11யானைகள் உயிரிழந்துள்ளன. தமிழ்நாட்டில் 2 யானைகள் உயிரிழந்துள்ளன என்று தெரிய வந்துள்ளது.

யானை வழித்தடங்களில் அறிவிப்புப் பலகைகள் வைப்பது, ரயில் ஓட்டுனர்களுக்கு யானை வழித்தடங்களில் குறைந்த வேகத்தில் ரயிலை இயக்க அறிவுறுத்துவது, யானைகளை விரட்ட தேன்கூடுகள் வைப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை ரயில்வே துறை எடுத்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

First published: