"இனியாவது திருந்துங்கள்... இல்லையேல் மக்கள் துரத்தி அடிப்பார்கள்" - டிராபிக் ராமசாமி

டிராபிக் ராமசாமி
  • News18
  • Last Updated: September 30, 2018, 1:20 PM IST
  • Share this:
தமிழக அரசை கலைக்க வேண்டும் என நாளை மறுநாள் வழக்கு தொடரபோவதாக டிராபிக் ராமசாமி கூறியுள்ளார். 

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை ஒட்டி முறைகேடாக வைக்கபட்டுள்ள பேனர்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும், நீதிமன்ற உத்தரவை மீறி பேனர் வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்தார்.

இதனை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் விதிமுறைகளை மீறி சட்ட விரோதமாக வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்றவும், அதற்காக தமிழக அரசு எடுத்த நடவடிக்கை குறித்தும் அரசு தரப்பில் வரும் 8-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.


இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த டிராபிக் ராமசாமி கூறுகையில், கடந்த 16 வருடங்களாக இது போன்று சுமார் 50 வழக்குகளை நீதிமன்றத்தில் போட்டுள்ளேன் என்று கூறினார். அதன்பின் உயர் நீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி, அனுமதி இன்றி பேனர்கள் வைக்கக்கூடாது எனக்கூறி, மீறினால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உத்தரவிட்டிருந்தார். ஆனால் தொடர்ந்து இந்த அரசாங்கம் இதேபோல் செய்து கொண்டிருந்தால் சரியாக இருக்காது என்றும் இந்த அரசை கலைக்க நாளை மறுநாள் வழக்கு தொடரபோவதாகவும் கூறினார். இனியாவது ஆட்சியாளர்கள் திருந்த வேண்டும் என்றும் இல்லையென்றால் மக்கள் ஆட்சியைவிட்டு அகற்றி விடுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
First published: September 30, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading