சமூக அவலங்களுக்கு எதிராக துணிவுடன் போராடிய டிராபிக் ராமசாமி மறைவு

சமூக அவலங்களுக்கு எதிராக துணிவுடன் போராடிய டிராபிக் ராமசாமி மறைவு

டிராபிக் ராமசாமி

சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 87.

 • Share this:
  தமிழக அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் எதிராக பல்வேறு பொதுநல வழக்கு தொடர்ந்து அதிரவைத்தவர் டிராபிக் ராமசாமி. அவருக்கு வயது (87). ஆரம்பக் காலத்தில் ராமசாமி சென்னை, பாரிமுனையின் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதில் போலீஸாருக்கு உதவி செய்தார். அதன்பிறகு டிராபிக் ராமசாமி என்று அழைக்கப்பட்டார்.

  கடந்த 20 ஆண்டுகளாக உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் மூலம் பல விஷயங்களைப் பொது வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளார். சென்னை வரம்பின்றி கட்டப்படும் கட்டடங்கள், வாகன பார்க்கிங் வசதி இல்லாமல் கட்டப்படும் கட்டடங்களுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்து தீர்வுகண்டவர். அதேபோல, சட்டவிதிமுறைகளை மீறி வைக்கப்படும் பேனர்களுக்கு எதிராகவும் வழக்குத் தொடர்ந்தார். அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருந்த காரணத்தால் அவருக்கு துப்பாக்கி ஏந்திய காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரையும் துணிவுடன் எதிர்த்தவர் டிராபிக் ராமசாமி.

  சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இன்று காலை வெளியான தகவலின்படி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளிவந்தது. இந்தநிலையில், சிகிச்சைப் பலனின்றி டிராபிக் ராமசாமி உயிரிழந்தார்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: