வீட்டின் மேற்கூரை விழுந்து சிறுவன் உயிரிழந்த விவகாரம் - நீதிமன்றத்தை நாடிய டிராபிக் ராமசாமி

டிராபிக் ராமசாமி

பராமரிக்காமல் இருக்கும் ஆபத்தான பழைய கட்டிடங்களை இடிக்க மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு, அதை அமல்படுத்த்தாத காரணத்தால் தான் சிறுவனின் உயிரிழப்பு நிகழ்ந்திருக்கிறது என டிராபிக் ராமசாமி தெரிவித்தார்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  சென்னை பிராட்வே பகுதியில் பழைய வீட்டின் மேற்கூரை விழுந்து சிறுவன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார்.

  சென்னை பிராட்வே சண்முகராயன் தெருவில் இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான மிகவும் பழமையான குடியிருப்புகள் உள்ளன.

  கடந்த புதன்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் சுரேஷ் என்பவரின் வீட்டின் மேற்கூரை இடிந்து கீழே விழுந்தது. இதில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த சுரேஷின் 8 வயது மகன் உயிரிழந்தான்.

  இது தொடர்பாக தாமாக முன் வந்து வழக்கை விசாரணை எடுக்க வேண்டும் என டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தார்.

  பராமரிக்காமல் இருக்கும் ஆபத்தான பழைய கட்டிடங்களை இடிக்க மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு, அதை அமல்படுத்த்தாத காரணத்தால் தான் சிறுவனின் உயிரிழப்பு நிகழ்ந்திருக்கிறது என டிராபிக் ராமசாமி தெரிவித்தார்.

  இதுதொடர்பாக மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்து கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

  Also see...

  Published by:Vinothini Aandisamy
  First published: