Home » News » Tamil-nadu » TRAFFIC CONGESTION IN PERUNGALATHUR SUR

சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்புவோர் எண்ணிக்கை அதிகரிப்பு: பெருங்களத்தூரில் போக்குவரத்து நெரிசல்

பல கிலோ மீட்டர் தூரத்திற்கு வானங்கள் ஊர்ந்து செல்கின்றன.

சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்புவோர் எண்ணிக்கை அதிகரிப்பு: பெருங்களத்தூரில் போக்குவரத்து நெரிசல்
பெருங்களத்தூரில் வாகன நெரிசல்
  • Share this:
பொங்கல் பண்டிகைக்காக, சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் பண்டிகை முடிந்து சென்னைக்கு திரும்பி வருகின்றனர். அதிக அளவில் வாகனங்கள் வருவதால், சென்னை பெருங்களத்தூர் உள்ளிட்ட முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து காவலர்கள் போக்குவரத்தை சீர் செய்து வருகின்றனர்.

பொங்கல் பண்டிகைக்கு சென்னையில் இருந்து பல லட்சம்பேர் சொந்த ஊர்களுக்கு சென்றனர். அவர்கள் பண்டிகை முடிந்து சென்னைக்கு திரும்பி வந்தவண்ணம் இருக்கின்றனர். இதனால், நேற்று மாலை முதலே பெருங்களத்தூர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படத் தொடங்கியது.

மேலும் படிக்க... 10, 12ம் வகுப்பு மாணவர்கள் சீருடை, பழைய பாஸ் இருந்தால் பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம்- எம்.ஆர்.விஜயபாஸ்கர்


பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததால் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு, போக்குவரத்து நெரிசல் குறைந்திருப்பதாக கூறும் வாகன ஓட்டிகள், எனினும் நெரிசல் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். இந்த நெரிசலை போக்குவரத்து காவலர்கள் தொடர்ந்து சீர் செய்து வருகின்றனர். எனவே, அதிக அளவில் நெரிசல் ஏற்படுவது தவிர்க்கப்பட்டுள்ளது.

எனினும், பல கிலோ மீட்டர் தூரத்திற்கு வானங்கள் ஊர்ந்து செல்கின்றன. இதேபோல, செங்கல்பட்டு, ஸ்ரீ பெரும்புதூர் டோல்கேட் பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகின்றது. இதனால், அங்கும் வானங்கள் ஊர்ந்து செல்கின்றன.

தாம்பரம், சென்னை கோயம்பேடு உள்ளிள்ள பல்வேறு பகுதிகளுக்கு வெளியூர்களில் இருந்து பேருந்துகளில் வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
First published: January 18, 2021
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories