பிரதமர் மோடி வருகை... சென்னையில் நாளை முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்

மாதிரிப் படம்

அண்ணாசாலையிலிருந்து ராயபுரம் நோக்கி வரும் வாகனங்கள் ஸ்பென்ஸர் பென்னி ரோடு, மார்ஸல் ரோடு, நாயம் பாலம், டவுட்டன் வழியாக தங்கள் இலக்கை சென்று அடையலாம்.

 • Last Updated :
 • Share this:
  பிரதமர் நரேந்திர மோடி அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க நாளை தமிழகம் வர உள்ளார். இதனை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

  இது தொடர்பாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “நாளை (14.02.2021) காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை போக்குவரத்து மாற்றியமைக்கப்பட உள்ளது. அதன்படி, கனரக மற்றும் சரக்கு வாகனங்கள் சென்னை பெருநகர எல்லைக்குள் வர அனுமதி இல்லை.

  மாநகர பேருந்துகள் மற்றும் பொதுமக்கள் வாகனங்கள் கீழ்கண்ட திருப்பி விடப்படும்.

  கோயம்பேட்டில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் நோக்கி வரும் வாகனங்கள் நாயர் பாலத்தின் வழியாக பாந்தியன் ரவுண்டானா, சித்ரா பாயிண்ட் வழியாக அண்ணாசாலை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

  ராயபுரத்தில் இருந்து பாரிமுனை நோக்கி வரும் வாகனங்கள் இப்ராகிம் சாலை மின்ட் சந்திப்பு, பேசின் பாலம் எருக்கஞ்சேரி ரோடு, அம்பேத்கர் சாலை, புரைசைவாக்கம் வழியாக தங்கள் இலக்கை சென்று அடையலாம்.

  அண்ணாசாலையிலிருந்து ராயபுரம் நோக்கி வரும் வாகனங்கள் ஸ்பென்ஸர் பென்னி ரோடு, மார்ஸல் ரோடு, நாயம் பாலம், டவுட்டன் வழியாக தங்கள் இலக்கை சென்று அடையலாம்.

  சவுத்கொனல் ரோட்டில் இருந்து காந்தி சாலை நோக்கி வாகனங்கள் கச்சேரி சாலை, லஸ் சந்திப்பு, ராயப்பேட்டை நெடுஞ்சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை சென்று அடையலாம் என்று தெரிவித்துள்ளனர்.
  Published by:Vijay R
  First published: