Home /News /tamil-nadu /

பிரதமர் மோடி - சீன அதிபர் சந்திப்பு: சென்னையின் பல இடங்களில் போக்குவரத்து மாற்றம்

பிரதமர் மோடி - சீன அதிபர் சந்திப்பு: சென்னையின் பல இடங்களில் போக்குவரத்து மாற்றம்

சென்னை சாலை

சென்னை சாலை

  • News18
  • Last Updated :
    சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையையொட்டி, சென்னையில், இன்றும் நாளையும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இன்றும், நாளையும் காலை 6 மணிமுதல் இரவு 11 மணிவரை சென்னை விமான நிலையம் முதல் சின்னமலை வரையும், சர்தார் வல்லபாய் படேல் சாலை, ராஜீவ்காந்தி சாலை, கிழக்கு கடற்கரை சாலை ஆகியவற்றிலும் கனரக வாகனங்கள், சரக்கு வாகனங்கள், டேங்கர் லாரிகள் அனுமதிக்கப்படாது என்று சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.

    இன்று நண்பகல் 12-30 மணி முதல் மதியம் 2 மணிவரை, பெருங்களத்தூர் வழியாக சென்னை நகருக்குள் வரும் வாகனங்கள் மதுரவாயல் புறவழிச் சாலை வழியாக திருப்பிவிடப்படும்.

    சென்னையின் தென்பகுதியிலிருந்து வரும் வாகனங்களும் குரோம்பேட்டை, தாம்பரம் வழியாக மதுரவாயல் புறவழிச் சாலையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இன்று பிற்பகல் 3-30 மணிமுதல் 4-30 மணிவரை, ஜிஎஸ்டி சாலையில் வரும் வாகனங்கள், கத்திப்பாரா சந்திப்பிலிருந்து 100 அடி சாலை வழியாக திருப்பி விடப்படும்.

    இன்று மதியம் 2 மணிமுதல் 9 மணிவரை, ராஜீவ் காந்தி சாலையில் வரும் வாகனங்கள், பெரும்பாக்கம் வழியாக திருப்பிவிடப்படும். கிழக்கு கடற்கரை சாலையில் வரும் வாகனங்கள் அக்கரை சந்திப்பில் முட்டுக்காடு செல்ல அனுமதிக்கப்படாது.

    இதேபோல, நாளை காலை 7-30 மணிமுதல் மதியம் 2 மணிவரை ராஜீவ் காந்தி சாலையில் வரும் வாகனங்கள், பெரும்பாக்கம் வழியாக திருப்பிவிடப்படும். காலை 7 மணிமுதல் மதியம் 1-30 மணிவரை கிழக்கு கடற்கரை சாலையில் வரும் வாகனங்கள் முட்டுக்காடு செல்ல அனுமதிக்கப்படாது என்று போக்குவரத்து காவல் துறை அறிவித்துள்ளது.

    அக்.11, 12-ல் காலை 6 முதல் இரவு 11 மணிவரை விமான நிலையம்-சின்னமலை, படேல் சாலை, ஓஎம்ஆர், இசிஆரில் கனரக, சரக்கு வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
    அக்.11 நண்பகல் 12.30 முதல் 2 மணி வரை, பெருங்களத்தூரிலிருந்து வரும் வாகனங்கள் மதுரவாயல் வழியாக திருப்பிவிடப்படும். தென்பகுதியிலிருந்து வரும் வாகனங்களும் மதுரவாயல் சாலையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    அக்.11 பிற்பகல் 3.30 மணி முதல் 4.30 மணி வரை, ஜிஎஸ்டி சாலையில் வரும் வாகனங்கள், கத்திப்பாராவிலிருந்து 100 அடி சாலை வழியாக திருப்பிவிடப்படும். அக்.11 மதியம் 2 மணி முதல் 9 மணி வரை ராஜீவ் காந்தி சாலையில் வரும் வாகனங்கள் பெரும்பாக்கம் வழியாக திருப்பிவிடப்படும்.

    ஈசிஆரில் அக்கரை சந்திப்பில் முட்டுக்காடு செல்ல அனுமதிக்கப்படாது. அக்.12 காலை 7.30 மணி முதல் 2 மணி வரை ராஜீவ் காந்தி சாலையில் வரும் வாகனங்கள் ஓஎம்ஆர் சாலையில் பெரும்பாக்கம் வழியாக திருப்பிவிடப்படும். அக்.12 காலை 7 மணி முதல் மதியம் 1.30 வரை, ஈசிஆரில் அக்கரை சந்திப்பில் முட்டுக்காடு செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது.

    எனவே மேற்கண்ட சாலைகளில் அமைந்துள்ள கல்வி நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் பயணதிட்டத்தையும் வழித்தடங்களையும் முன்னேற்பாடு செய்யுமாறு போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    Published by:Sankar
    First published:

    Tags: Mamallapuram Summit

    அடுத்த செய்தி