ஆடாத கால்களையும் மெய் மறந்து ஆட வைக்கும் நையாண்டி மேளம்..

Youtube Video

ஆரம்பகாலத்தில் திருமணம் மற்றும் கோவில் திருவிழாக்களில் நையாண்டி மேளம் பயன்படுத்தப்பட்டு வந்ததால் இதனை நம்பி மேளக் கலைஞர்கள் பலர் வாழ்ந்து வந்தனர்.

 • Share this:
  கரகாட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் உள்ளிட்ட நாட்டுப்புற ஆட்டங்களுக்குப் முதுகெழும்பான இசையாக இருப்பது நையாண்டி மேளம். இந்த நையாண்டி மேளத்திற்கு நாதசுவரம், தவில் முதன்மை இசைக்கருவியாகவும், பம்பை, உறுமி, கிடிமுட்டி போன்ற இசைக் கருவிகள் பக்க வாத்தியமாகவும் இருக்கும். திறந்தவெளி அரங்கில் மேளக் குழுவினரால் வட்டமாக நின்று அடிக்கும் நையாண்டி மேளம், ஆடாத கால்களையும் ஆட வைக்கும்.

  கோவில்களில் கூட நையாண்டி மேளம் அடித்தால் தான், சாமியாடிகளுக்குக் கூட அருள் வரும். இத்தகைய பெருமை பெற்ற இந்த நையாண்டி மேளம் இன்றைய சூழலில் படிப்படியாக அழிந்து வருகிறது.

  ஆரம்பகாலத்தில் திருமணம் மற்றும் கோவில் திருவிழாக்களில் நையாண்டி மேளம் பயன்படுத்தப்பட்டு வந்ததால் இதனை நம்பி மேளக் கலைஞர்கள் பலர் வாழ்ந்து வந்தனர். ஆனால், தமிழகத்தில் தற்போது, சுபகாரியங்களிலும், அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும், கேரளத்து பாரம்பரிய செண்டை மேளம் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. இதனால், நையாண்டி மேள கலைஞர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். இந்த மேளத்திற்க்கு நடனமாடக்கூடிய கிராமிய நடனக்கலைஞர்களும் வேலையிழந்துள்ளனர்.

  பல்கலை கழகங்களில், நாட்டுப்புறவியல் பாடப்பிரிவுகள் இருந்தாலும், இந்த பாடப்பிரிவிற்கு அங்கிகாரம் இல்லை. இசையில் ஆர்வம் உள்ள பல இளைஞர்களும் அரசுவேலை வாய்பை கருத்தில் கொண்டு மற்ற பாடபிரிவுகளையே தேர்ந்தெடுக்கின்றனர். எனவே அரசு பல்கலை கழகங்களில் நாட்டுப்புறவியல் பாடப்பிரிவை அங்கிகரிக்க வேண்டும் என்றும், நாட்டுப்புறவியல் பாடப்பிரிவை படித்தவர்களுக்கு சுற்றுலா துறையில் வேலை வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்றும் கலைஞர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

  மேலும் படிக்க...ஆம் ஆத்மி எம்.பி.க்கள் 3 பேர் அவை நடவடிக்கைகளில் இருந்து வெளியேற்றம்...

  தமிழகத்தில் நடைபெறும் அனைத்து அரசு விழக்களிலும் நையாண்டி மேளத்தை பயன்படுத்தினால், அழிந்து வரும் நையாண்டி மேளத்தை பாதுகாப்பதோடு, வரும்கால சந்ததியினருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும் என கிராமிய இசைக்கலைஞர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.


  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: