ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தைப் பொங்கல் திருநாள் - தமிழர்களின் பாரம்பரிய திருவிழா

தைப் பொங்கல் திருநாள் - தமிழர்களின் பாரம்பரிய திருவிழா

Pongal Festival 2022 : உழவையும், உழவுக்கு உதவி செய்பவற்றயும் போற்றி வழிபட ஆண்டுதோறும் தை மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது பொங்கல்.

Pongal Festival 2022 : உழவையும், உழவுக்கு உதவி செய்பவற்றயும் போற்றி வழிபட ஆண்டுதோறும் தை மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது பொங்கல்.

Pongal Festival 2022 : உழவையும், உழவுக்கு உதவி செய்பவற்றயும் போற்றி வழிபட ஆண்டுதோறும் தை மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது பொங்கல்.

  • 3 minute read
  • Last Updated :

தமிழகத்தில் எண்ணற்ற பாரம்பரிய பண்டிகைகள் கொண்டாடப்பட்டு வந்தாலும் வரிசையாக 4 நாட்கள் கொண்டாடப்படும் திருவிழாவான பொங்கல் பண்டிகை தான் நமக்கு மிக முக்கிய பண்டிகையாக இருந்து வருகிறது. விவசாயத்தை செழிக்க வைக்கும் சூரியன் மற்றும் பிற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றி தெரிவிக்கும் கொண்டாட்டமாக இருக்கும் பொங்கல் பண்டிகை இயற்கைக்காக அர்ப்பணிக்கப்பட்ட பண்டிகையாக இருக்கிறது.

உழவையும், உழவுக்கு உதவி செய்பவற்றயும் போற்றி வழிபட ஆண்டுதோறும் தை மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது இப்பண்டிகை. தென்னிந்திய மாநிலங்களில் குறிப்பாக தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் 4 நாள் நீண்ட அறுவடை திருநாள் இது. சூரியன் தெற்கு அரைக்கோளத்தின் உச்சத்தை அடைந்து வடக்கு அரைக்கோளத்திற்கு திரும்ப தொடங்கும் போது இந்த பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. நமது தமிழர் கலாச்சாரத்தில் பெரும்பாலும் எந்த ஒரு நல்ல செயலையும் தை மாதத்தில் துவக்குவது என்பது பழங்காலத்தில் இருந்து தொடர்ந்து வரும் பழக்கம்.

ஆடியில் விதைத்த நெல் தை மாதத்தில்அறுவடை செய்யப்படுவதால் இது அறுவடை மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. அறுவடை காரணமாக உற்சாகத்துடன் இருக்கும் விவசாயம் செழிக்க உதவி மக்கள் தங்கள் மகிழ்ச்சிக்கு காரணமாக இருப்பவற்றை பொங்கல் பண்டிகையின் போது கொண்டாடுகின்றனர். போகி பண்டிகை, தை பொங்கல் (அ) சூரிய பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கல் என்று நான்கு நாட்கள் பெரிய திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது பொங்கல். வரும் ஜனவரி மாதம் 14-ஆம் தேதி போகியுடன் துவங்க உள்ள பொங்கல் திருவிழா. ஜனவரி 17-ல் காணும் பொங்கலுடன் சிறப்பாக முடிவடைய உள்ளது. (Pongal Holidays In 2022)

Also read: எந்தெந்த திசைகளில் படுக்கையை வைத்து தூங்கினால் நன்மைகள் அதிகம்?

பண்டிகைதேதிகிழமை
போகிப்பண்டிகைஜனவரி 14, 2022வெள்ளிக்கிழமை
தைப்பொங்கல்ஜனவரி 15, 2022சனிக்கிழமை
மாட்டுப்பொங்கல்ஜனவரி 16, 2022ஞாயிற்றுக்கிழமை
காணும்பொங்கல்ஜனவரி 17, 2022திங்கட்கிழமை

இதில் எந்தெந்த நாள் எதற்காக கொண்டாடப்படுகிறது என்பதை பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்..

போகி பண்டிகை (Bhogi Festival): மார்கழியின் கடைசி நாளில் கொண்டாடப்படும் போகி பண்டிகை "பழையன கழிதலும் புதியன புகுதலுமே" என்ற சாராம்சத்தை அடிப்படியாக கொண்டது. பழைய பொருட்கள் மற்றும் பயனற்றவையை தூக்கி எறியும் நாளாக இது கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் வீட்டை தூய்மை செய்து பயன்படுத்தாத அல்லது தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்துவது வழக்கம். பழையவற்றை அழித்து போக்கும் இந்த பண்டிகை முன் "போக்கி' என்றே அழைக்கப்பட்டுள்ளது. நாளடைவில் இது மருவி போகி என்றாகிவிட்டது. முன்னர் இந்த நாளில் கடைபிடிக்கப்பட்டு வந்த முக்கிய பழக்கம் என்னவென்றால், வீட்டில் உள்ள தேவையற்ற பொருட்கள் அனைத்தையும் மரம், மாட்டு சாணம் உள்ளிட்டவற்றால் மூடப்பட்டநெருப்பில் தூக்கி எறிந்து எரிப்பது. ஆனால் இப்போது தேவையற்ற அல்லது பழைய பொருட்களை தூக்கி எறிகின்றனர் அல்லது தீயிட்டு கொளுத்துகின்றனர்.

தைப் பொங்கல் (Thai Pongal):திருவிழாவின் இரண்டாம் நாள் தைப் பொங்கல் என்றழைக்கப்படுகிறது. அரிசியுடன் தொடர்புடை "பொங்கல்" என்ற சொல்லையே இயற்கையை வழிபட மற்றும் கொண்டாட பண்டிகையின் பெயராக வைத்து விட்டனர் பண்டைய தமிழர்கள். இந்த நாளில் வீட்டின் நுழைவாயிலை கோலங்கள் மற்றும் தோரணங்களுடன் அலங்கரிக்கிறார்கள். வெற்றிகரமான அறுவடை மற்றும் விளைச்சலுக்கு காரணமான சூரியனை வழிபடும் விதமாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

இதனால் பொங்கல் திருவிழாவின் போது, புதிய நெல்லில் இருந்து கிடைத்த அரிசியை பாலில் காய்ச்சியும், கரும்புகளை வைத்தும் சூரியனுக்கு பிரசாதமாக படைக்கிறார்கள். மேலும் புதிய மண் பானையில் புதிய அரிசியில் சர்க்கரை பொங்கல் மற்றும் வெண் பொங்கல் ஆகியவற்றை தயார் செய்து பொங்கல், செங்கரும்பு, புதுமஞ்சள், பனங்கிழங்கு, காய்கறிகள், பருப்பு மற்றும் பழ வகைகள் உள்ளிட்டவற்றை சூரியனுக்கு படையலிட்டு பொங்கல் பொங்கி வரும் போது "பொங்கலோ பொங்கல்" என்று ஆராவாரம் செய்கிறார்கள்.

also read : குளிர்காலத்தில் சுறுசுறுப்பாக இருக்க இந்த 7 வழிமுறைகளை பின்பற்றுங்கள்..

மாட்டுப்பொங்கல் (Mattu Pongal):விழாவின் மூன்றாம் நாளில் விவசாயத்திற்கு உறுதுணையாக இருந்து வாழ்வை செழிக்க வைக்கும் மாடுகளை போற்றும் விதமாக மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. இது பட்டிப் பொங்கல் அல்லது கன்று பொங்கல் என்றும் குறிப்பிடப்படுகிறது. மாடுகள் மற்றும் கன்றுகளின் தொழுவம் சுத்தம் செய்யப்பட்டு, கால்நடைகளையும் குளிப்பாட்டி சுத்தம் செய்து அவற்றின் கொம்புகளில் கலர் பூசி அவற்றை மேலும் பல விதமாக அலங்கரித்து, சலங்கை கட்டி விடுவார்கள். மேலும் அவற்றுக்கு புதிய மூக்கணாங் கயிறு, தாம்பு கயிறு உள்ளிட்டவற்றையும் அணிவித்து தயார் செய்து கூடவே உழவுக்கருவிகளைச் சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைத்து மாடுகளையும், கருவிகளையும் வழிபடுவார்கள்.

காணும் பொங்கல் (Kaanum Pongal) : இந்நாளை கன்னி பொங்கல் அல்லது கணுப் பண்டிகை என்றும் கூறுவார்கள். தற்காலத்தில் இந்நாள் உறவினர், நண்பர்களை பார்த்து பேசி மகிழ்வது மற்றும் பெரியவர்களிடம் ஆசிர்வாதம் பெறுவது மற்றும் பல விளையாட்டு போட்டிகளுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் பண்டைய காலத்தில் இந் நாளில், எஞ்சியவை (உணவு) கரும்பு மற்றும் வெற்றிலையுடன் கழுவப்பட்ட மஞ்சள் இலையில் வைக்கப்பட்டு, பெண்கள் தங்கள் சகோதரர்களின் நலனுக்காக வேண்டி கொள்ளும் நாளாக இருந்துள்ளது.

First published: