பெரம்பலூர் மாவட்டத்தில் குடியரசு தினத்தன்று (26.01.2021) சட்ட விதிமுறைகளை மீறி டிராக்டர் மற்றும் இருசக்கர வாகன பேரணி நடத்தினால் சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.நிஷா பார்த்திபன் எச்சரித்துள்ளார்கள்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து குடியரசு தினத்தன்று டிராக்டர் மற்றும் இருசக்கர வாகன பேரணி நடத்தப்படும் என விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.
அதன்படி 26.01.2021 அன்று எவ்வித பேரணிகளையும் பெரம்பலூர் மாவட்டத்தில் நடத்த அனுமதி கிடையாது என கூறியுள்ளார்.
மேலும் படிக்க... டெல்லியில் நாளை பிரமாண்ட டிராக்டர் பேரணி நடத்த விவசாயிகள் திட்டம்
கொரோனா பரவலை கருத்தில் கொண்டு மக்கள் அதிகளவில் ஒன்றுகூடும் வகையில் பேரணி நடத்தினால் சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இதனை மீறி பேரணி நடத்தினால் மோட்டார் வாகனச் சட்டப்படி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.